கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சஞ்சு சாம்சன் வழிநடத்தினாலும் காயம் காரணமாக நான்கு போட்டிகளில் அவருக்குப் பதிலாக ரியான் பராக்தான் கேப்டனாக செயல்பட்டார். மேலும் அவருக்குப் பதிலாக இளம் வீரரான ரியான் பராக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போன்ற ஒரு தோற்றமும் எழுந்தது.
இந்நிலையில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக கிசுகிசுக்கள் உலவ ஆரம்பித்தன. அவரை சி எஸ் கே அணி ட்ரேடிங் மூலமாக வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் சஞ்சு சாம்சனைக் கொடுத்துவிட்டு ஜடேஜாவைப் பெற்றுக்கொள்ள அந்த அணி விருப்பம் தெரிவித்ததாக சொல்லப்பட்டது.
இந்த டிரேட் குறித்து தற்போது மேலதிக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த டிரேடை முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. சஞ்சு சாம்சனைக் கொடுத்துவிட்டு ராஜஸ்தான் அணி ஜடேஜா மற்றும் சாம் கர்ரண் ஆகியோரைப் பெற்றுக் கொண்டுள்ளதாக சொலல்ப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு 48 மணி நேரத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.