ஐபிஎல் போட்டிகளுக்கான மினி ஏலத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக முக்கிய வீரர்கள் சிலரை அணியில் இருந்து விடுவிக்க உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
2026ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில், வரும் டிசம்பர் மாதத்தில் வீரர்கள் தேர்வுக்கான மினி ஏலமும் நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசியாக 2023ல் 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. ஆனால் கடந்த 2 சீசன்களாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ள சிஎஸ்கே அணி ப்ளே ஆப்க்கு கூட முன்னேற முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில் அணியை வலுப்படுத்தவும், இளம் வீரர்களை பயிற்ச்சியளிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2026 ஐபிஎல் சீசனுக்கு தக்கவைக்கப்படும் வீரர்கள், விடுவிக்கப்படும் வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் நவம்பர் 15க்குள் பிசிசிஐயிடம் அளிக்க வேண்டும். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 5 ஸ்டார் வீரர்களை விடுவிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, விஜய் சங்கர், தீபக் ஹூடா, சாம் கரண், ராகுல் திருப்பாதி, டெவான் கான்வே உள்ளிட்ட வீரர்கள் விடுவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வினும் ஓய்வு அறிவித்து விட்ட நிலையில் சிஎஸ்கேவிடம் கையிருப்பு 40 கோடிக்கும் மேல் உயர்ந்தால், மினி ஏலத்தில் சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களை வாங்கலாம் என திட்டமிட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
Edit by Prasanth.K