18 ஆண்டுகள் காத்திருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக் கடந்த சீசனில் கோப்பையை வென்றது. அந்த அணியை முதல் முறையாகக் கேப்டன் பொறுப்பேற்று நடத்திய ரஜத் படிதார் முதல் சீசனிலியே கோப்பையை வென்று கொடுத்தார்.
அந்த அணிக்கு டிராவிட், கும்ப்ளே, வெட்டோரி, கோலி, டு பிளசீஸ் என பல ஜாம்பவான்கள் கேப்டனாக இருந்தபோதும் பெற முடியாத வெற்றியை இளம் வீரர் படிதார் தலைமையில் பெற்றது. இதையடுத்து கவனிக்கப்படும் வீரராக மாறியிள்ள படிதார் தற்போது உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஏ அணிக்காக அவர் விளையாடி வருகிறார். அந்த போட்டியின் போது அவர் காயமடைந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் காயம் குணமாக நான்கு மாதங்கள் ஆகும் என தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடருக்கு முன்பாக அவர் குணமாகிவிடுவார் என சொல்லப்படுகிறது.