தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக விளங்கி வருபவர் அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயிண்ட்டன் டிகாக். அந்த அணியின் மூத்த வீரர்கள் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் இப்போது அந்த அணியின் பேட்டிங் நம்பிக்கையாக உள்ளார் டிகாக்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த டிகாக் கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரோடு ஓய்வை அறிவித்தார். அப்போது ஓய்வு பற்றி பேசிய அவர் “நான் கடந்த 11 ஆண்டுகளாக அணிக்கு உண்மையாக விளையாடியுள்ளேன். பிரான்ச்சைஸ் டி 20 கிரிக்கெட்களில் கிடைக்கும் பணத்துக்காகதான் நான் இப்போது ஓய்வை அறிவித்துள்ளேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதியில்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். எந்தவொரு சாதாரண மனிதனும் செய்ய நினைக்கும் செயல் இதுதான்.” எனக் கூறியிருந்தார்.
ஆனால் இப்போது அவர் ஓய்வு முடிவில் இருந்து மீண்டும் சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளார். விரைவில் பாகிஸ்தானுக்கு எதிராக நடக்கும் ஒரு நாள் போட்டித் தொடரில் அவர் தென்னாப்பிரிக்கா அணியோடு இணையவுள்ளார்.