ஆசியக் கோப்பை 2025 தொடரில் இந்தியா பாகிஸ்தானை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு நெருக்கமாக வந்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்த வெற்றி, இந்திய அணிக்கு அனைத்து வடிவங்களிலும் பாகிஸ்தானுக்கு எதிராக கிடைத்த ஏழாவது தொடர் வெற்றியாகும்.
இந்த நிலையில் செப்டம்பர் 24 அன்று துபாய் மைதானத்தில் பங்களாதேஷ் அணியை இந்தியா எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டியில் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அணிக்குள் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
சஞ்சு சாம்சனுக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஓமனுக்கு எதிராக அவர் அரைசதம் அடித்திருந்தாலும், அது டி20-யில் அவரது மிகவும் நிதானமான அரைசதமாகும். நேற்றைய போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு அவர் உதவியிருக்கலாம். ஆனால் அவரது பேட்டிங் சொதப்பிவிட்டது. எனவே அவருக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா அணியில் சேர்க்கப்படலாம்.
மேலும், பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பணிச்சுமையை குறைக்கும் வகையில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம். அவருக்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.
பங்களாதேஷுக்கு எதிராக உத்தேச இந்திய அணி இதுவாக இருக்கலாம்.
சுப்மன் கில், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங்.