இன்றைய போட்டியில் ஷமியும் ஆப்செண்ட்டா?... களமிறங்கப் போகும் இளம் பவுலர்!

vinoth
ஞாயிறு, 2 மார்ச் 2025 (07:57 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி இன்று நடக்கிறது. இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டதால் இந்த போட்டியின் முடிவு சாம்பியன்ஸ் கோப்பைக்கான அரையிறுதி தேர்வில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதால் இந்த போட்டிக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை.

இந்நிலையில் இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா தசைப் பிடிப்புக் காரணமாக விளையாட மாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முகமது ஷமியும் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது.

அவருக்குப் பதில் இளம் பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் களமிறங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் ரோஹித் ஷர்மாவுக்குப் பதில் இடம்பெற, ஷுப்மன் கில் தலைவராக அணியை வழிநடத்துவார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

அடுத்த கட்டுரையில்
Show comments