Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிஷப் பண்ட்டுக்கு நான் போட்டியா?... கே எல் ராகுல் அளித்த பதில்!

vinoth
ஞாயிறு, 2 மார்ச் 2025 (07:51 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டியின் முடிவு சாம்பியன்ஸ் கோப்பைக்கான அரையிறுதி தேர்வில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதால் இந்த போட்டிக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை.

இந்நிலையில் இன்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா , தசைப் பிடிப்புக் காரணமாக விளையாடாமல் போகும் பட்சத்தில் ரிஷப் பண்ட் அவருக்குப் பதில் களமிறக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. அணியில் கே எல் ராகுல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருப்பதால் ரிஷப் பண்ட்டுக்கு ஒரு நாள் அணியில் இடம் கிடைப்பதில்லை.

இந்நிலையில் ரிஷப் பண்ட் பற்றி பேசியுள்ள கே எல் ராகுல் “ரிஷப் பண்ட்டுக்கும் எனக்கும் இடையே எந்த போட்டியும் இல்லை. அவரைப் போல ஆடவும் நினைக்கவில்லை. அவருக்கு வாய்ப்புக் கிடைக்கும் போது அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நியுசிலாந்துக்கு எதிரான நாளையப் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு!

தோல்விக்குப் பொறுப்பேற்று கேப்டன் பதவியை துறந்த ஜோஸ் பட்லர்!

இந்தியாவில் முதல்முறையாக ரியல் மாட்ரிட் - பார்சிலோனா கால்பந்து போட்டி: ரசிகர்கள் மகிழ்ச்சி

ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை… ஆனாலும் பாகிஸ்தான் அணிக்கு இவ்வளவு பெரிய தொகை பரிசா?

ஐபிஎல் பயிற்சியைத் தொடங்கிய எம் எஸ் தோனி… வைரலாகும் புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments