இந்திய அணி நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளையும் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்திய அணி போட்டிகள் மட்டும் துபாயில் நடப்பதால் அங்குள்ள சூழல் இந்திய அணியினருக்கு சில இடர்ப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் குறுகிய இடைவெளியில் இரண்டு போட்டிகளை ஆடியதால் இந்திய அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் வரும் ஞாயிற்றுக் கிழமை நடக்கவுள்ள நியுசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் ரோஹித் ஷர்மா விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது. அதனால் இந்திய அணியை அந்த போட்டியில் ஷுப்மன் கில் தலைமையேற்று வழிநடத்தவுள்ளதாக சொல்லப்படுகிறது.