கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக முழங்கால் காயத்தினால் அவதிப்பட்டு வந்த ஷமி சமீபத்தில் இந்திய அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சிறப்பாக பங்களிப்பு செய்த அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே பங்களாதேஷ் அணிக்கு எதிராக 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்களை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். பும்ரா இல்லாத நிலையில் இந்திய அணியின் பவுலிங் யூனிட்டை அவர் வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் கே எல் ராகுல் ஷமி குறித்துப் பேசியுள்ளார்.
அதில் “இந்திய அணியில் ஷமி கடினமான பவுலர். அவரை பயிற்சியின் போது கூட அவரை எதிர்கொள்வதை நான் விரும்பமாட்டேன்” எனக் கூறியுள்ளார். அதே போல மற்ற அணி பவுலர்களில் ரஷீத் கானை எதிர்கொள்வதை விரும்பமாட்டேன் எனக் கூறியுள்ளார்.