சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா அணி இமாலய வெற்றியைப் பெற்றது. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடியதை தொடர்ந்து, 103 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்க முடிந்தது.
இந்த இன்னிங்ஸில் தோனி உள்ளிட்ட பல வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இந்த இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிக எளிதாக பத்தாவது ஓவரிலேயே வெற்றி பெற்றது. இந்த தோல்வியால் சி எஸ் கே அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு குறைந்துள்ளது.
இதனால் வேதனையில் இருக்கும் சி எஸ் கே அணி ரசிகர்களை ஆறுதல் படுத்தும் விதமாக கே கே ஆர் அணி தங்கள் சமூகவலைதளப் பக்கத்தில் “சிஎஸ்கே அணி ஒரு சாம்பியன். அவர்கள் கண்டிப்பாக வலுவாக திரும்பி வருவார்கள்” என்று சொல்லி ரசிகர்களின் வெந்த புண்ணில் வெந்நீரை ஊற்றியுள்ளனர்.