சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா அணி இமாலய வெற்றியைப் பெற்றது. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடியதை தொடர்ந்து, 103 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்க முடிந்தது.
சிஎஸ்கே வின் இந்த மோசமான பேட்டிங்கால ரசிகர்கள் முதல் பாதி முடிந்த உடனே மைதானத்தை விட்டு வெளியேறினர். இதையடுத்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பத்தே ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி வாகை சூடியது.
சி எஸ் கே அணிக்கு தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றதை அடுத்து வெற்றிப் பாதைக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ச்சியாக ஐந்தாவது தோல்வியைப் பெற்று புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.