Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

Advertiesment
தோனி

vinoth

, சனி, 12 ஏப்ரல் 2025 (08:29 IST)
ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் அணிகளில் ஒன்றாக இருந்து வரும் சி எஸ் கே அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக ஐந்து தோல்விகளைப் பெற்றுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் 103 ரன்கள் மட்டுமே சேர்த்து படுதோல்வியை சந்தித்தது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

நேற்றையப் போட்டியில் ருத்துராஜுக்கு பதில் தோனி கேப்டனாகப் பொறுப்பேற்று வெற்றிப்பாதைக்கு அணியைத் திருப்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த தோல்வி அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதனால் சி எஸ் கே அணிக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சிஎஸ்கே அணியை நடிகர் விஷ்ணு விஷால் கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளார். அதில் “நான் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதை தவிர்த்துவிட்டு இதை சொல்கிறேன். எந்தவொரு வீரரை விடவும் விளையாட்டுதான் பெரிது. ஏன் இவ்வளவு கீழ்வரிசையில் இறந்த வேண்டும்(தோனி). விளையாட்டு என்பது வெற்றி பெறுவதற்காக விளையாடுவது அல்லவா? ஆனால் இது ஏதோ சர்க்கஸ் பார்ப்பது போல உள்ளது.” என விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!