சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா அணி இமாலய வெற்றியைப் பெற்றது. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடியதை தொடர்ந்து, 103 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்க முடிந்தது.
நேற்று சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முதலில் சொதப்ப ஆரம்பிக்க, அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் தொடர்ந்து சொதப்பினார். இதனால் ஒரு உறுதியான பார்ட்னர்ஷிப்பை அந்த அணியால் உருவாக்கமுடியவில்லை. இதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் தங்களின் மிக மோசமான ஸ்கோரை நேற்று நிர்ண்யித்தது சி எஸ் கே.
இந்நிலையில் சென்னை அணியின் பேட்டிங்கை வலுப்படுத்த வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே ஒரு அறிவுரையைக் கூறியுள்ளார். அதில் “சென்னை அணியில் ஜடேஜாவை நான்காவது பேட்ஸ்மேனாகக் களமிறக்க வேண்டும். அந்த இடத்தில் பரிசோதிக்கப்பட்ட மற்ற பேட்ஸ்மேன்களை விட அவர் தகுதியானவர். பெரிதாக அதிரடி தேவைப்படாத போது அவரின் பலத்திற்கு ஏற்ற இடம் அது என்று நான் நினைக்கிறேன். அப்படி நடக்கும் பட்சத்தில் சி எஸ் கே அணியின் மிடில் ஆர்டர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கலாம்” எனக் கூறியுள்ளார்.