Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கால் காயத்துடன் பேட்டிங் செய்ய வந்த ரிஷப் பண்ட்… standing Ovation கொடுத்த ரசிகர்கள்!

Advertiesment
இந்தியா vs இங்கிலாந்து

vinoth

, வெள்ளி, 25 ஜூலை 2025 (09:30 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பரபரப்பாக  மான்செஸ்டரின் ஓல்ட் ட்ரஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி தற்போது 225 ரன்கள் சேர்த்து 2 விக்கெட்களை இழந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி பேட் செய்யும் போது ரிஷப் பண்ட் கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை காலில் வாங்கினார். அதன் காரணமாக அவருக்கு காலில் சிறு எலும்பு முறிவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனாலும் அந்த வலியுடன் அவர் திரும்ப வந்து பேட் செய்தார். அவர் மீண்டும் களமிறங்கிய போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் அவரைக் கைதட்டி உற்சாகப்படுத்தினர். அவர் மேலும் சில ரன்கள் சேர்த்து அரைசதம் குவித்தார். ஆனால் ஃபீல்டிங்கின் போது அவருக்கு பதிலாக துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் அபார ஆட்டம்.. விக்கெட் எடுக்க முடியாமல் திணறிய இந்தியா..!