இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணியில் சாய் சுதர்சன் 61 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்களும், ரிஷப் பண்ட் 54 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அபாரமாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இந்திய பேட்டிங் வரிசையை சரித்தார்.
இதனை அடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான பென் டக்கெட் 94 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கிராலி 84 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
நேற்றைய இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 225 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. அந்த அணி தற்போது 133 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. இங்கிலாந்து அணியின் எஞ்சிய விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தி முன்னிலை பெறுவதே இந்திய அணியின் முக்கிய நோக்கமாக இருக்கும். அதே சமயம் இங்கிலாந்து அணி, இந்தியாவை விட முன்னிலை பெற்று வலுவான நிலையில் முதல் இன்னிங்ஸை முடிக்க முயற்சிக்கும்.