கடந்த சில நாட்களாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயமாக உள்ளது சஞ்சு சாம்சன் – ஜடேஜா டிரேட் பேச்சுவார்த்தை. இந்த டிரேட் குறித்து தற்போது மேலதிக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த டிரேடை முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. சஞ்சு சாம்சனைக் கொடுத்துவிட்டு ராஜஸ்தான் அணி ஜடேஜா மற்றும் சாம் கர்ரண் ஆகியோரைப் பெற்றுக் கொண்டுள்ளதாக சொலல்ப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு 48 மணி நேரத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
ஆனால் ஜடேஜாவை சென்னை அணி ட்ரேட் செய்யக் கூடாது என்பது ரசிகர்களின் விருப்பமாகவும், முன்னால் வீரர்களின் விருப்பமாகவும் உள்ளது. ஏனென்றால் ஜடேஜா சென்னை அணிக்காகப் பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். 2023 ஆம் ஆண்டு அந்த அணி ஐபிஎல் கோப்பையை வெல்லக் காரணமாக அமைந்ததே ஜடேஜாதான். அதனால் தோனி அவரை டிரேட் செய்ய அனுமதிக்க மாட்டார் என பலரும் கூறி வருகின்றன.
ஆனால் இது குறித்து முகமது கைஃப் வேறு விதமானக் கருத்தைத் தெரிவித்துள்ளார். அதன்படி “நீண்ட கால நோக்கில் அணிக்குத் தலைமைத் தாங்க கூடிய ஒரு வீரரை தோனிக் கட்டாயம் விரும்புவார். அணிக்கு நன்மை இருக்குமென்றால் ஜடேஜாவை டிரேட் செய்ய தோனி சம்மதிப்பார்” எனக் கூறியுள்ளார்.