Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று உலக UFO தினம் - வேற்றுக்கிரகவாசிகள் குறித்த நமது புரிதல் தவறா?

aliens
, சனி, 2 ஜூலை 2022 (12:56 IST)
இன்று உலக யு.எஃப். தினம். பிரபஞ்சத்தில் வேற்றுக்கிரகவாசிகளுக்கான தேடல் என்பது மிகவும் சுவாரஸ்யமான தேடல்களில் ஒன்றாகும். யுஎஃப்ஒ என்ற அடையாளம் புலப்படாத பறக்கும் மர்ம பொருட்கள் மற்றும் வேற்றுகிரகவாசிகள் முதல் செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் வரை, வேற்றுகிரகங்களில் எந்த வகையான உயிர்கள் இருக்கும், அவை எப்படி இருக்கும், வளரும் போன்ற ஊகங்களுக்கு முடிவே இல்லை. இந்த வேற்றுகிரகவாசிகள் பூமியில் உள்ள பண்டைய நாகரிகங்களைச் சந்தித்திருக்க வேண்டும் என்று இணையத்தில் பல காணொளிகள் உள்ளன. இல்லையெனில், 'மாயன்கள்' இத்தகைய அற்புதமான கோயில்களை எப்படி கட்டியிருப்பார்கள் என்ற கேள்வி உள்ளது.

ஆனால், இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஒருவர் 250 ஏ.டியிலிருந்து மாயன் சமூகத்தில் இருந்திருந்தால், அது அவருக்கு மிகுந்த அவமானமாக இருக்கும்.

ஆனால், வேற்றுக்கிரகவாசிகள் குறித்த சுவாரஸ்யமான கோட்பாடாகவும், அதிக நம்பகத்தன்மை கொண்ட ஒன்று உள்ளது. அது பான்ஸ்பெர்மியா (panspermia) என்ற கோட்பாடு.

அது என்ன கோட்பாடு? அதாவது, பிரபஞ்சம் முழுவதும் உயிர்கள் உள்ளன. அவை பிரபஞ்சத்தில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு விண்வெளியில் பயணம் செய்ய முடியும் என்பதே அந்த கோட்பாடு.

இந்தக் கூற்று உறுதியாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், எம்.ஐ.டி மற்றும் ஹார்வர்டின் பல்கலைகழகங்களில் முக்கிய ஆராய்ச்சியாளர்கள் குழு, சில வகையான உயிர்கள் உண்மையில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டதா என்ற கூற்றை ஆராய்ந்து வருகின்றனர்.

இது சாத்தியமா?

உயிர்கள் நம்ப முடியாத அளவிற்கு சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றியமைக்கக் கூடியவை. நமது மனித இனமே உலகம் முழுவதும் வளர்ந்த விதத்தைப் பாருங்கள். மேலும் ஆர்க்கியா மற்றும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் மில்லியன் கணக்கான ஆண்டுகால பரிணாம வளர்ச்சியில் தங்களை மாற்றியமைக்க முடிந்தது.

சல்பர், அம்மோனியா, உலோக மாங்கனீசு ஆகியவை கொண்டும், பிராணவாயு இருக்கும் அல்லது இல்லாதசூழ்நிலையிலும், இன்று பல்வேறு வகையில் உயிர்வாழக்கூடிய நுண்ணுயிரிகள் உள்ளன என்பதே இது குறிக்கிறது. சில உயிர்கள் பூமியில் உள்ள மிக மோசமான சூழ்நிலையிலும் உயிர்வாழ்கின்றனர்.

இந்த மிகச்சிறிய நுண்ணுயிரிகள் பிரபஞ்சத்தின் மற்ற கிரகங்களுக்கு எப்படி பயணம் செய்யும்? நமது சூரிய குடும்பத்தையும் அதற்கு அப்பாலும் ஆராயும்போது நமக்கு இதற்கான விடை கிடைப்பது எளிது.

டெர்சிகோகஸ் ஃபீனிசிஸ் ( Tersicoccus phoenicis ) என்பது விண்வெளி சென்று வந்த நாசா விண்கலத்தை சுத்தம் செய்யும்போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பாக்டீரியா ஆகும். தற்செயலாக பூமியிலிருந்து சந்திரனுக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் பாக்டீரியாவை ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருக்க முடியுமா?

இந்த நுண்ணுயிரிகள் சூரிய குடும்பத்தைச் சுற்றி வருவதற்கான மற்றொரு சாத்தியமான வழி விண்கற்களில் ஹிட்ச்ஹைக்கிங் ( hitchhiking) செய்வதாகும். இவை ஒரு கிரகத்தில் மோதும்போது, பாறைகளும் சிதைபொருள்களும் விண்வெளியில் சிதறி, அதிக விண்கற்களை உருவாக்குகின்றன.

இதுவரை, செவ்வாய் கிரகத்தின் 313 விண்கற்கள் பூமியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பூமியில் இருந்த பாறை நிலவில் காணப்பட்டது. பாறைகள் கிரகங்களில் பயணித்திருக்கிறது என்பதை இதில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

உயிர்கள் எப்படி அங்கு வாழ முடியும்?

விண்வெளியில், குளிர் மற்றும் பிராணவாயு பற்றாக்குறையை இத்தகைய நுண்ணுயிரிகள் எளிதில் சமாளிக்க முடியும். மேலும் வழக்கமான பாக்டீரியாக்கள் கூட தீவிரமான சூழ்நிலைகளில் கீழ் செயலற்ற நிலைக்குச் செல்லலாம். அப்போது, நுண்ணுயிரி விதைகள் எனப்படும் அவற்றின் டி.என்.ஏ அதற்கு பாதுகாப்பான உட்புற அறைகளை உருவாக்குகின்றன.
webdunia

வெப்பம், குளிர், அமிலம், வறட்சி மற்றும் UV ஆகியவற்றை பாக்டீரியாவின் டிஎன்ஏ விண்வெளியில் பயணிக்க சாத்தியமாக்குகின்றது. மற்றொரு பெரும் சிக்கல் என்னவென்றால், விண்வெளியில் கதிர்வீச்சு நிறைந்து, டிஎன்ஏவை துண்டாடுகிறது. டீனோகோகஸுக்கு (Deinococcus) என்பது ஒரு பிரச்சனை இல்லை. இதன் வகையைச் சார்ந்தவை விண்வெளியில் மூன்று வருடங்கள் இருந்துள்ளன. மற்றவை நுண்ணுயிரி விதைகள் வடிவில் ஆறு ஆண்டுகள் வரை உயிர் பிழைத்துள்ளன.

மற்றொரு விஷயம் நேரம். விண்வெளி மிகப்பெரியது. அங்கு எங்கும் பயணம் செய்தாலும், நீண்ட நேரம் எடுக்கும்.

2020 ஆம் ஆண்டில், ஜப்பானிய விஞ்ஞானிகள் 100 மில்லியன் ஆண்டுகளாக கடலின் அடிப்பகுதியில் செயலற்ற நிலையில் இருந்த பாக்டீரியாக்களை உயிர்ப்பித்தனர். இந்த சிறிய விண்வெளி பயணிகளுக்கு அசாதாரணமான தூரங்கள் ஒரு பிரச்னையாக இருக்காது.

இறுதியாக, பிரபஞ்சத்தின் புதிய இடங்களுக்கு பயணிக்கும் பாக்டீரியாக்கள் அதன் தாக்கத்தை தாங்குவதாகும். பாக்டீரியாக்கள் அதைச் செய்ய முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அவை அண்டப் பாறையில் மோதும்போது, அந்த தாக்கத்தை தாங்கியுள்ளது.

நுண்ணுயிர்கள் செவ்வாய் கிரகம் போன்ற கிரகங்களில் எங்காவது பயணித்திருக்க சாத்தியம் உள்ளது. 3.8 பில்லியன் ஆண்டுகள் முன்பு, செவ்வாய் கிரகம் பூமியைப் போலவே இருந்தன என்ற அடிப்படையில் இது நிகழ்ந்திருக்கலாம்.

இந்த மிகச்சிறிய நுண்ணுயிரிகள் (extremophile) செவ்வாய் கிரகத்தை ஏற்கனவே காலனித்துவப்படுத்தியிருக்க முடியுமா? அவை ஏற்கனவே அங்கு இருந்தால், அந்த புதிய சூழலுக்கு ஏற்ப தங்களை வடிவமைத்துக்கொண்டதா? அல்லது பூமியில் உள்ள உயிர்கள் உண்மையில் செவ்வாய் கிரகத்தில் தோன்றி நமது கிரகத்திற்கு பயணித்ததா?

அவை சிறிய வேற்றுகிரகவாசிகளாகவோ அல்லது நாம் புரிந்துகொண்டபடி அறிவார்ந்த உயிரினங்களாகவோ இல்லாமல் இருக்கலாம். ஆனால் சூரிய குடும்பம் மற்றும் அதற்கு அப்பால் உயிர்கள் பயணம் செய்திருக்கக் சாத்தியக்கூறுகள் இருக்கலாம். இது மிகவும் புதிரானவை.

ஜேம்ஸ் டி வெப் தொலைநோக்கி மற்ற கிரகங்களில் தொலைதூர வாழ்வின் அறிகுறிகளை மனிதர்களாகிய நாம் தேடத் தொடங்கும் போது, நாம் நினைத்ததை விட 'அண்டவெளி' மிகவும் புதிரானதாகவே இருக்கிறது.

(இது பிபிசி ஐடியாஸ் பிரிவில் இருந்து தொகுக்கப்பட்ட கட்டுரை)


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2018ல் மட்டும் 15 லாக்கப் மரணங்கள்! – டிஜிபி அதிர்ச்சி தகவல்!