சமீப காலமாக காவல்துறையின் விசாரணை கைதி மரண சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சில காலமாக தமிழ்நாட்டில் காவல் நிலையங்களுக்கு விசாரணக்காக அழைத்து செல்லப்படும் கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி செய்திகளில் இடம்பெற்று வருகின்றன. மேலும் கடந்த சில காலமாகதான் இது அதிகரித்துள்ளதாக மக்கள் மத்தியில் பேச்சு நிலவி வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள டிஜிபி சைலேந்திரபாபு “கடந்த 10 ஆண்டுகளில் 80 காவல்நிலைய மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் 12 மரணங்கள் போலீஸாரால் ஏற்பட்டவை. அதிகபட்சமாக 2018ல் மட்டும் 15 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது” என கூறியுள்ளார்.