Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீடியோ செல்ஃபி மூலம் வயதை கண்டறியப் போகும் இன்ஸ்டாக்ராம் – என்ன காரணம்?

ஆறு வயது மகள் பெயரில் போலி இன்ஸ்டாகிராம்
, திங்கள், 27 ஜூன் 2022 (13:20 IST)
பதின்ம வயதினரின் வயதைச் சரிபார்க்கவும் தளத்தின் விதிகளுக்கு இணங்க வைக்கவும் இன்ஸ்டாக்ராம் புதிய வழிகளை ஆராய்ந்து வருகிறது.

மெட்டாவுக்கு சொந்தமான செயலிகள், புதிய வயது சரிபார்ப்பு முறையாக முகப் பகுப்பாய்வு மென்பொருளுடன் கூடிய வீடியோ செல்ஃபி வசதிகளைச் சோதித்து வருகிறது.
இன்ஸ்டாக்ராமில் உள்ள சில பயனர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாகத் தோன்றும் வகையில் அவர்களுடைய பிறந்த தேதியைத் திருத்திக் கொள்வதன் மூலம், 13 வயதுக்கு மேற்பட்ட 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான விதிகளைத் தவிர்க்க முயல்கின்றனர்.

ஆனால், இதைச் செய்ய முயலும் அமெரிக்க பதின்ம வயதினருக்காக, இப்போது அவர்களின் வயதைச் சரிபார்க்க, பயனர்களின் அடையாள அட்டையைப் பதிவேற்றுவது, 18 வயதுக்கு மேற்பட்ட மூன்று பயனர்களை அவர்களுக்காக உறுதியளிக்கச் சொல்வது, வீடியோ செல்ஃபி எடுப்பது ஆகிய மூன்று வழிகள் வழங்கப்படும்.

இன்ஸ்டாக்ராமில் இளம் வயதினருக்கு "வயதுக்கு ஏற்ற அனுபவம்" இருப்பதை இந்தப் புதிய முறைகள் உறுதி செய்யும் என நம்புவதாக மெட்டா கூறியுள்ளது.

பதின்ம வயதினர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில், சமூக ஊடகங்கப் பெருநிறுவனமான மெட்டா முன்னர் விமர்சனங்களை எதிர்கொண்டது.

ஃபேஸ்புக்கில் இருந்து படங்கள் வெளியே பகிரப்படுவது குறித்து வெளியே கூறிய இடித்துரைப்பாளர் ஃப்ரான்சிஸ் ஹவுகன் கூறியதைத் தொடர்ந்து, ஒளிப்படப் பகிர்வு பயன்பாட்டில் குழந்தைகளின் அனுபவங்கள் குறித்து பல அமெரிக்க மாநிலங்கள் கடந்த ஆண்டு இன்ஸ்டாக்ராமை விசாரித்தன.

சைல்ட்நெட்டின் (Childnet) தலைமை நிர்வாகியும் பிரிட்டன் பாதுகாப்பான இணைய மையத்தின் (UK Safer Internet Centre) இயக்குநருமான வில் கார்ட்னர் ஒபிஈ, இந்த விசாரணை ஊக்கமளிப்பதாகக் கூறியுள்ளார். மேலும், "குழந்தைகளுக்குத் தேவையில்லாத உள்ளடக்கத்திலிருந்து அவர்களைப் பாதுகாக்கவும் அவர்களுடைய இணைய அனுபவத்தை மிகவும் வயதுக்கு ஏற்புடையதாக மாற்றவும் முயற்சிகளை எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன," என்று கூறினார்.

டிஜிட்டல் சூழலில் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பிரசாரம் செய்யும் பிரிட்டன் அமைப்பான, 5ரைட்ஸ் ஃபவுண்டேஷன், இத்தகைய முயற்சிகள் "மிகவும் காலதாமதமானவை" என்று கூறுகிறது.

சமூக ஊடக தளம், "உங்கள் பயனர்களின் வயதை வெறுமனே அறிவது போதாது. பல லட்சம் குழந்தைகளை ஆபத்தில் ஆழ்த்துவதற்கு வழிவகுத்த 'பார்க்கக் கூடாததை பார்க்க வேண்டாம்' என்ற மனப்பான்மையை விட்டுவிட வேண்டும்," என்று கூறுகிறது.

பதின்ம வயது இன்ஸ்டாக்ராம் பயனர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு இந்த மாதத் தொடக்கத்தில் இன்ஸ்டாகிராமில் தங்கள் குழந்தையின் அனுபவத்தைக் கண்காணிப்பதற்கான கூடுதல் வசதிகள் வழங்கப்பட்டன.
webdunia

அவர்கள் இப்போது நேர வரம்புகளை அமைக்கலாம், தளத்தில் தங்கள் குழந்தை செய்யும் எந்த செயல்பாட்டின் விவரங்களையும் பார்க்கலாம்.

பதின்ம வயதினர் இன்ஸ்டாக்ராமின் தேடல் பக்கத்தில் ஒரே தலைப்புகளைத் திரும்பத் திரும்பப் பார்க்கும்போது மற்ற உள்ளடக்கங்களையும் பார்க்குமாறு "நகர்த்தப்படுவார்கள்." மேலும் ரீல்களில் தொடர்ந்து ஸ்க்ரோலிங் செய்துகொண்டிருந்தால், "ஓய்வெடுக்குமாறு" ஊக்குவிக்கப்படுவார்கள்.

வீடியோ செல்ஃபிகளின் பயன்பாடு

ஆன்லைன் பேங்கிங் செயலிகளைப் போன்ற டிஜிட்டல் தளங்களில் பயனர்களின் வயது அல்லது அடையாளத்தைச் சரிபார்க்க வீடியோ செல்ஃபிகள் பிரபலமான வழியாக உள்ளது. இன்ஸ்டாக்ராம் தற்போது அந்த வீடியோ செல்ஃபிகளை, கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கு பூட்டப்பட்டால் அவர்களுடைய அடையாளத்தைச் சரிபார்க்க இதைப் பயன்படுத்துகிறது.

மெட்டா பிரிட்டன் பிரிவு, டிஜிட்டல் அடையாள வழங்குநரான யோடி (Yoti) உடன் கூட்டு சேர்ந்துள்ளது. அதன் தொழில்நுட்பம் மனித முகங்கள் மற்றும் முக அம்சங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் வயதை மதிப்பிடுகிறது.

பெயர் தெரியாத நபர்களின் முகப் படங்கள் மற்றும் அவர்களுடைய பிறந்த தேதியில் பயிற்சியளிக்கப்பட்ட அதன் அல்காரிதம், அவர்களுடைய வயதைத் தவிர, பயனர்களைப் பற்றிய வேறு எதையும் தனித்தனியாக அடையாளம் காண முடியாது என்று யோடி கூறுகிறது.

மே மாதம் வெளியிடப்பட்ட அதன் சமீபத்தி வெள்ளை அறிக்கை, 6 முதல் 12 வயதுடையவர்களில் 1.36 ஆண்டுகள் பிழை வரம்புடன் இந்தத் தொழில்நுட்பத்தின் துல்லியம் இருப்பதாகவும் 13 முதல் 19 வயதுடையவர்களுக்கு 1.51 ஆண்டுகள் வரை பிழை வரம்புடன் இருப்பதாகவும் கூறுகிறது.

பயனரின் வயது உறுதி செய்யப்பட்டவுடன் இரண்டு நிறுவனங்களும் அவர்களின் படத்தை நீக்கிவிடும் என்று மெட்டா கூறுகிறது.

இதற்கிடையில், சமூக ஊடகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர் தான் என்று உறுதியளிக்குமாறு 18 வயதுக்கு மேற்பட்ட மூன்று பரஸ்பர பிந்தொடர்பவர்களைக் கேட்க அனுமதிக்கிறது. ஒரு பயனரின் வயது எவ்வளவு என்பதை உறுதிசெய்யுமாறு கேட்கப்படுபவர்கள் குறைந்தபட்சம் 18 வயதுடையவராக இருக்க வேண்டும். அதேநேரத்தில் மற்ற பயனர்களுக்கு அவர் உறுதியளிக்க முடியாது.

சமூக ஊடகத்தில் பாதுகாப்பாக உணருதல்

பயனர்களின் அடையாளர் அட்டையைக் கேட்பதோடு கூடுதலாகக் கொடுக்கப்பட்டிருக்கும் இன்ஸ்டாக்ராமின் புதிய வயது சரிபார்ப்பு முறைகள் வரவேற்கத்தக்கது என்று ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் டிஜிட்டல் மீடியா மற்றும் சமூக விரிவுரையாளர் டாக்டர் யஸபெல் ஜெரார்ட் கூறுகிறார்.
webdunia

ஆனால், ஆன்லைனில் இளைஞர்ளைப் பாதுகாப்பதற்கான ஒழு வழியாக வயது சரிபார்ப்புக் கருவிகளை நம்பியிருப்பதால், அவர்கள் உண்மையில் வயது வந்தோருக்கான கணக்குகளை உருவாக்க முயல்வது ஏன் என்பதைக் கவனிக்காமல் விட வாய்ப்புள்ளது என்கிறார்.

"இன்ஸ்டாக்ராமில் தங்களுக்கு 18 வயதாவதாகச் சொல்லிக் கொள்வது, மோசமான விஷயங்கலைச் செய்யவோ அல்லது மோசமான உள்ளடக்கங்களைப் பார்க்கவோ அல்ல என்று பலர் கூறுகிறார்கள்.

தங்களை வயது வந்தவராகப் பதிவு செய்துகொள்வது அவர்களைப் பாதுகாப்பாக உணர வைக்கிறது. ஏனெனில், அவர்கள் வயது வந்தோருக்கான கணக்காகத் தொடங்கிப் பயன்படுத்தினால் குறிவைக்கப்படமாட்டோம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்," என்று டாக்டர் ஜெரார்ட் கூறுகிறார்.

டாக்டர் ஜெரார்டை பொறுத்தவரை, இன்ஸ்டாக்ராமின் புதிய சரிபார்ப்பு விதிமுறைகள், சமூக ஊடக தளங்களில் குழந்தைகள் பாதுகாப்பாக உணர உதவுவது எது என்பது பற்றிய பெரிய கேள்விகளை எழுப்புகின்றன.

அவர், "வயது வந்தவரைப் போல் நடிப்பது, அவர்கள் பாதுகாப்பாக உணர உதவும் விஷயங்களில் ஒன்று. இது கடுமையாக இருந்தாலும் உண்மை," என்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொதுக்குழுவில் கலந்து கொண்ட 3 அதிமுக பிரபலங்களுக்கு கொரோனா!