Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த ராசிக்காரர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் வெற்றியை தரும்! - இன்றைய ராசி பலன்கள் (23.02.2025)!

Advertiesment
astro

Prasanth Karthick

, ஞாயிறு, 23 பிப்ரவரி 2025 (06:01 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேஷம்:
இன்று பொருட்கள் திருட்டு போகலாம். ஜாக்கிரதை. ஞாபக சக்தியை இழக்காமல் இருப்பதற்கு மனதை சஞ்சலத்தில் ஆழ்த்த கூடாது. பயிற்சியினால் அது சாத்தியமாகும். கலைத்துறையினருக்கு ஓரளவு நன்மைகள் வந்து சேரும். ஓரளவு சோதனைகளும் இருக்கும். முன்னோர்கள் வழிபாடு மிகவும் முக்கியம். நம்பிக்கையுடன் செய்யும் இந்த வழிபாட்டால் நேர்மறையான செயல்கள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9

ரிஷபம்:
இன்று ஓட்டை உடைசலாக இருந்த பழைய வாகனத்தை மாற்றிவிட்டு லோன் மூலம் புதிது வாங்குவீர்கள். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். வீடு வாங்குவது, விற்பதிலிருந்த சிக்கல்கள் தீரும். லாகிரி, போதை வஸ்துக்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களில் கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வந்துசேரும். வழக்குகள் சாதகமாகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

 
மிதுனம்: 
இன்று சுபச் செலவுகள் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளால் அவ்வப்போது அலைச்சலும், டென்ஷனும் இருக்கும். அவர்களால் ஆதாயமும் உண்டு. வழக்கில் அவசர முடிவுகள் வேண்டாம். மறைமுக எதிர்ப்புகள் விலகும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சொத்துப் பிரச்னை தீரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

 
கடகம்:
இன்று எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றியின் விளிம்பில் சென்று முழு வெற்றியடையாமல் இருந்து வந்த நிலை மாறும். உடல் நிலை சீரான நிலையில் இருக்கும். சிலருக்கு கண் கோளாறுகள் இருந்தால் அது நீங்கும். பேச்சை பாதியாக குறைப்பது நல்லது. நீங்கள் சொல்லாததை எல்லாம் சொன்னதாக சொல்லி வம்பிழுக்கும் மனிதர்கள் உங்களை சூழ்ந்து இருக்கலாம். குடும்பத்தில் பேசுவதற்கு முன் நன்கு யோசித்து பேசுங்கள். பண விஷயங்களில் மிகவும் கறாராக இருக்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

சிம்மம்:
இன்று இடம், மனை வாங்க கடன் பெறும் வாய்ப்புகள் கிடைக்கும். பலனை எதிர்பாருங்கள். தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். தாங்களும் அரசின் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஷேர் முதலீடுகள் செய்ய ஏற்ற காலமும் இதுதான். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் கூடும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்னைகளை பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

கன்னி:
இன்று குழந்தைகளால் நன்மை பெறுவீர்கள். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். பொன், பொருள் சேரும். மனதில் அமைதி குறையும். எல்லா விதத்திலும் பரபரப்பு தொற்றிக் கொள்ளும். பங்கு மார்க்கெட் நல்ல லாபத்தை தரும். அரசியல்வாதிகளுக்கு பெண்கள் உதவியால் உயர் பதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

துலாம்:
இன்று நல்ல மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிறிய பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். நல்லவிதமாக நடந்து அதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குவீர்கள். மனைவி வழியில் இருந்து வந்த சங்கடங்கள் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

 
விருச்சிகம்:
இன்று தனியான பிரயாணங்களை தவிர்த்து விடுங்கள். குடும்பப் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டிய காலம். வீட்டில் அந்நிய நபர்களை சேர்ப்பதற்கு முன் ஆலோசிக்கவும். முடிந்தவரை வாழ்க்கைத் துணையுடன் அனைத்து பிரயாணங்களிலும் செல்லவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

 
தனுசு:
இன்று பணத்தை முதலீடுகளாக மாற்ற சிறந்த நாள். சகோதர உதவி பரிபூரணமாகக் கிட்டும். கண் பார்வையில் ஏதேனும் பிரச்னை இருந்தால் உடனே பார்த்துக் கொள்வது நல்லது. கண்ணாடி அணியாமல் வண்டிகளில் செல்லாதீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் பேச்சு கைகூடும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

மகரம்:
இன்று மனதில் குழப்பங்கள் சூழும். இதை முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளாதிருங்கள். கடினமான வேலைகளையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள். வருமானம் சீராக இருப்பதால் கடன்கள் ஏற்படாது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கும்பம்:
இன்று லாபங்கள் பெருகும். தடைபட்ட சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். புதிய கடன்கள் இனி ஏற்படாது. இருக்கும் கடன் சுமையும் குறையும். வெளிநாடு செல்லும் திட்டம் வெற்றி பெறும். உத்யோகஸ்தர்களுக்கு பதவி, சம்பளம் உயரும். நீங்கள் விரும்பிய இடமாறுதலும் கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

மீனம்:
இன்று . பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும். பெண்களுக்கு காரியங்களில் இருந்த எதிர்ப்புகள் விலகும். மனகுழப்பம் நீங்கும். கலைத்துறையினருக்கு பொறுமையுடன் செயல்பட வேண்டும். மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐந்து விதமான சிவராத்திரி.. என்னென்ன என்பதை பார்ப்போமா?