இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
மேஷம்:
இன்று உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கருத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது. வேலையில் இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
ரிஷபம்:
இன்று கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை குறைந்து போகும். தொட்டதுக்கெல்லாம் குற்றம் குறை கண்டுபிடித்து சண்டையிடுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் சிலர் உங்களுக்குள் சண்டை, சச்சரவை ஏற்படுத்தி விடுவார்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை அவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். விலை உயர்ந்த பொருட்கள், நகைகளை கவனமாகக் கையாளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
மிதுனம்:
இன்று அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல மணமகன் அமைவார். பாதியிலேயே நின்றுபோன வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். புத்துணர்ச்சி ததும்பும். எதிலும் ஆர்வம் பிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
கடகம்:
இன்று தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு். பிள்ளைகளின் வளர்ப்பினல் கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
சிம்மம்:
இன்று பல்வேறு விதமான வேலைகளையும் பொறுப்புகளையும் ஏற்பீர்கள். உடல் சோர்வோடு பிடிமானமில்லா மனநிலையும் தான் மிச்சம் என்றிருந்தது. இனி கவலை வேண்டாம். புதிய வழிமுறைகளில் நூதனமாக காரியம் சாதிக்க பொறுமையாக அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
கன்னி:
இன்று சிக்கல்கள் தீர்ந்து தொட்டதெல்லாம் பொன்னாகும். செயல்களை செம்மையுற திருத்தமாக செய்வீர்கள். உங்களுக்கு அற்புதமான நல்ல பலன்கள் கிட்டும். வசதிகள் ஓங்கும். புதிய சொத்துகள் சேரும். வெற்றிகளை சுவைக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
துலாம்:
இன்று கல்வியில் முன்னேற்றம். நீண்ட பயணங்கள், விரய செலவுகள், எச்சரிக்கையற்ற முன்கோபத்தால் மனஸ்தாபங்கள் இவற்றை தவிர்க்க அரும்பாடு பட வேண்டி இருக்கும். நினைத்ததை சாதிக்க கடுமையாக உழைப்பீர்கள். வாடிக்கையாளர் வெறுப்புகளால் வியாபாரத்தடை ஏற்படும். எச்சரிக்கையுடன் பணிபுரியுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
விருச்சிகம்:
இன்று பிள்ளைகளால் பெருமை. குடும்பத்தை கவனிப்பதில் அக்கறை வளரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான மாற்றம் ஏற்படும். பணப் பற்றாக்குறை நீங்கும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் முன்னேற்றத்திற்கு கைகொடுக்கும். வியாபாரத்தில் வெற்றி கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
தனுசு:
இன்று முயற்சியெல்லாம் வெற்றியாகும். வாழ்க்கைத்துணையின் உதவி எல்லா வகையிலும் கிடைக்கப் பெறும். குடும்பத்திற்கு இது ஒரு பொற்காலம். கடன்களின் சுமை எதுவும் இல்லாமல் சுபகாரியங்கள் நிறைவேறும். காத்திருக்கும் பெண்கள் வேலை வாய்ப்பையும் நல்ல கணவனையும் ஒருசேரப் பெறுவர்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
மகரம்:
இன்று பயணங்களால் பலன் உண்டு. எதிலும் துடிப்புடனும் ஈடுபாட்டுடனும் இயங்குவீர்கள். எளிதில் உணர்ச்சிவசப்படுவீர்கள். உங்கள் கடமையிலும் காரியத்திலும் கண்ணாக இருப்பீர்கள். சோம்பலை விரும்ப மாட்டீர்கள். எந்த வேலையையும் முதல் முறையிலேயே முடிக்க வேண்டும் என நினைப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
கும்பம்:
இன்று சற்று நிதானமாக செயல்பட வேண்டிய நாள். எவரைப் பற்றியும் எதிர்மறை கருத்துக்களை வெளியிடாதீர்கள். குடும்பத்தில் பிரிவு ஏற்படலாம். தற்செயலான விபத்துக்களை சந்திக்க நேரும். உணவு விஷயத்தில் கடும் எச்சரிக்கை தேவை. இரவு, அதிகாலை நேரங்களில் பிரயாணங்களை தவிர்க்க வேண்டும். நேரம் தாண்டி இரவு உணவு உட்கொள்ள வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
மீனம்:
இன்று தொழிலை விரிவுபடுத்துவீர்கள். முடங்கிக் கிடந்த தொழிலை எடுத்து ஒன்றை இப்போது செயல்படுத்துவீர்கள். வருமானத்தை அதிகரித்துக் கொள்ள நல்ல சந்தர்ப்பம் வரும். வியாபார பேரங்கள் செய்யும் போது எதிர்ப்புகள் கூடும். எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். பேச்சில் நிதானத்தையும் வரம்பையும் கடைப்பிடியுங்கள். பெண்களுக்கு குடும்பச் செலவுகளுக்கு பணம் கிடைப்பது சிரமமாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6