இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
மேஷம்:
இன்று ஊதிய விஷயங்களில் நல்ல மனநிலை இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் ஈட்டும் காலமிது. பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியம், கதை, கவிதைத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். அழகுநிலையம் வைத்திருப்போர், காஸ்மெட்டிக்ஸ் வியாபாரம் செய்வோர் மற்றும் ஆடை அணிகலன்கள் விற்பனை செய்வோருக்கு ஏற்ற காலமிது. தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள சரியான சமயமிது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
ரிஷபம்:
இன்று அரசுக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, வருமான வரி எதுவாக இருந்தாலும் தாமதிக்காமல் உடனே செலுத்திவிடுவது நல்லது. வங்கிக் காசோலைகளில் முன்னதாக கையெழுத்து போட்டு வைக்காதீர்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக ஒருமுறைக்கு இருமுறை கவனமாக படித்துப் பார்த்த பிறகு கையெழுத்துப் போடுங்கள். சட்டத்திற்கு புறம்பான வகையில் எந்த காரியத்தையும் செய்யாதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9
மிதுனம்:
இன்று சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பணம் எவ்வளவு வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். என்றாலும் சமாளிப்பீர்கள். சிலரால் வீண்பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள், எல்லா விஷயங்களிலும் எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
கடகம்:
இன்று எதை பேசினாலும் அவமானம், எதை செய்தாலும் தலைகுனிவு என இருந்தீர்களே? அந்த நிலை மாறும். உங்களது யோசனைகளை அலுவலகத்திலும், குடும்பத்திலும் மதிக்கும் நேரம் வந்து விட்டது. உங்களது மேலான யோசனைகளை சொல்ல தயாராகுங்கள். நல்லது. சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்த நிலையும் மாறப் போகிறது. இனியாவது வாக்கு கொடுப்பதற்கு முன் யோசித்து கொடுக்கவும். தைரியம் பிரகாசிக்கும் நேரமிது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
சிம்மம்:
இன்று உயர் படிப்புகளை நீங்கள் விரும்பும் துறையில் தொடரலாம். கலை மற்றும் நுண்கலைத் துறைகளில் தேர்ந்தெடுத்தால் சிறந்து விளங்கலாம். சற்று வருத்தமான மனநிலை இருக்கும். ஜுரம், மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் வரலாம். பொறுமை தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5
கன்னி:
இன்று மனை, மனைவி வாய்க்கும் பொன்னான காலம் இது. லாபங்கள் பெருகும். தடைபட்ட சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். புதிய கடன்கள் இனி ஏற்படாது. இருக்கும் கடன் சுமையும் குறையும். வெளிநாடு செல்லும் திட்டம் வெற்றி பெறும். உத்யோகஸ்தர்களுக்கு பதவி, சம்பளம் உயரும். நீங்கள் விரும்பிய இடமாறுதலும் கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6
துலாம்:
இன்று தொழிற்சாலைகளில் தொழிலாளர்களால் பிரச்னைகள் ஏற்படும்; கவனமாக இருங்கள். பயணங்களின்போது விபத்து, காயம் என்று ஏற்படலாம். எச்சரிக்கை தேவை. ஒவ்வாமை, விஷ உணவு சேர்தல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். உணவில் மிகுந்த கட்டுப்பாடு தேவை. சமையலறை பொருட்களை சுகாதாரமாகக் கையாள வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
விருச்சிகம்:
இன்று முக்கிய பொறுப்புகள் ஏற்க வேண்டி வரும். தொல்லை கொடுத்து வந்த அதிகாரிகளிடமிருந்து விடுதலை கிடைக்கும். ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவதால், நலிவடைந்த தொழில்கள் முன்னேற்றம் அடையும். பிள்ளைகள் திருமணம் மகிழ்ச்சி பொங்க நடைபெறும். கைவிட்டுப் போன பொருட்கள், சொத்துகள், சொந்தங்கள் ஆகியவை மீளும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9
தனுசு:
இன்று நோய்களின் தாக்கம் குறையும். வாகனங்கள் நினைத்தபடி ஒத்துழைக்கும். சுற்றமும் உறவும் அலுவலகமும் ஒருசேர நன்மையாகவே இயங்கும். புதிய தொழில்கள் துவங்கும்போது கூட்டு வியாபாரம் பற்றி சிந்திக்காதீர்கள். எதையும் தனியாகவே செய்யுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3
மகரம்:
இன்று கொஞ்சம் சந்தேகப்புத்தி வளரும். செல்வச் செழிப்போடு செல்வாக்கும் உங்களுக்கு வந்து சேரும். அனைத்துக் காரியங்களிலும் சராசரிக்கும் கூடுதலான வெற்றிகளைக் காண்பீர்கள். சேமிப்புகளை ஆதாயம் தரும் விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். கடினமாக உழைத்து லாபமடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6
கும்பம்:
இன்று குழந்தைகளால் நன்மை பெறுவீர்கள். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். பொன், பொருள் சேரும். மனதில் அமைதி குறையும். எல்லா விதத்திலும் பரபரப்பு தொற்றிக் கொள்ளும். பங்கு மார்க்கெட் நல்ல லாபத்தை தரும். அரசியல்வாதிகளுக்கு பெண்கள் உதவியால் உயர் பதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6
மீனம்:
இன்று ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் முதலீடுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். வங்கிக் கடன் முதலீடு கணக்கை பெறும்போது சற்று தாமதப்படுத்தி பெறுதலே நல்லது. வாகன விபத்துக்கள், தீக்காயங்கள் ஆகியவை ஏற்படக்கூடும்; எச்சரிக்கை. பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் முன் தகுந்த ஆலோசனை அவசியமாகிறது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7