Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த ராசிக்காரர்களுக்கு கல்வி, தேர்வுகளில் கவனம் அவசியம்! - இன்றைய ராசி பலன்கள் (18.02.2025)!

Advertiesment
astro

Prasanth Karthick

, செவ்வாய், 18 பிப்ரவரி 2025 (06:01 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
 

மேஷம்:
இன்று எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். பெற்றோர் உடல் நலத்தில் கவனம் கொள்ளுங்கள். தொழில்களை விரிவுபடுத்துவதை சற்று தள்ளிப் போடவும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் முதலீடுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். வங்கிக் கடன் முதலீடு கணக்கை பெறும்போது சற்று தாமதப்படுத்தி பெறுதலே நல்லது. தீக்காயங்கள் ஆகியவை ஏற்படக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

ரிஷபம்:
இன்று போட்டியாளர்களிடம் வம்பு செய்யாமல் விலகி இருப்பீர்கள். பிள்ளைகளுக்கு வரன் தேர்ந்தெடுக்கும் போது எச்சரிக்கையாக இருங்கள். மாணவர்களின் கல்வியில் தேக்கம் ஏற்படலாம், சம்பள பணத்தை வீடு சேரும்வரை கவனமாக பாதுகாப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மிதுனம்: 
இன்று திடீர் யோகம், பணவரவு எல்லாம் உண்டு. பிரபலங்களின் உதவி கிடைக்கும். வெளிமாநில புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். காதலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். நொறுக்குத் தீனிகளை குறையுங்கள். தலைவலி, மாதவிடாய்க் கோளாறு சரியாகும். கல்யாணம் கூடிவரும். சிலர் தடைபட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். உங்கள் திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்.மாணவர்களே! மறதி, மந்தம் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

 
கடகம்:
இன்று தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம்.  பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

சிம்மம்:
இன்று உங்களின் கடின உழைப்புக்காக பதவி உயர்வு, சம்பள உயர்வெல்லாம் உண்டு. தொட்ட காரியங்கள் வெற்றியடையும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கணவன்-மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். பணவரவு அதிகரிப்பதால் பழைய கடனில் ஒருபகுதியை அடைப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

கன்னி:
இன்று குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. முன்விரோதம் காரணமாக ஒரு சிக்கல் வரலாம். அதனை சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு என்பதை உணருங்கள். புதிய முயற்சிகளில்  ஈடுபடும் போது தகுந்த  ஆலோசனைகளை மேற்கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

துலாம்:
இன்று தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

விருச்சிகம்:
இன்று உங்கள் ஞாபக சக்தியும், அறிவாற்றலும் பெருகும். அதேநேரம் விளையாடும் நேரங்களில் கவனமாக இருக்கவும். பெற்றோர்களின் ஆதரவுடன் உங்களின் எதிர்காலக் கல்வித் திட்டங்களைச் செவ்வனே நிறைவேற்றிக் கொள்வீர்கள். மதிப்பு மரியாதை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

தனுசு:
இன்று கால்நடைகளை வளர்ப்பதால் நல்ல வருவாய் கிட்டும். நிலத்தை திருத்தியமைக்க பணம் வந்து சேரும். திருடு போன பொருட்கள் வந்து சேரும். சொந்தமாக தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு அரசாங்கம் மூலமாக கடன் வாங்கி ஆரம்பிக்கலாம். ஆனால் ஆரம்பிக்கும் முன் தகுந்த ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.  அரசியல், சமூக பொறுப்பில் உள்ளவர்கள் சுயநலம் பாராமல் உழைக்க வேண்யதிருக்கும். அதனால் உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

மகரம்:
இன்று விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். உங்களிடம் இருந்து பிரிந்த சொந்தங்கள் திரும்பி சேர்வார்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். போட்டிகளை சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிர்பார்க்காத பதவி கிடைக்கும். உங்கள் தொண்டர்கள் உங்களுக்காக உழைப்பார்கள். எந்த சவாலையும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் சமாளியுங்கள். எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். எதிலும் கவனமாக செயல்படுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கும்பம்:
இன்று பழைய சரக்குகளை லாபகரமாக விற்றுத் தீர்க்கப்பாருங்கள். பாக்கிகளை அலைந்து திரிந்துதான் வசூலிக்க வேண்டிவரும். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். ஹோட்டல், ஷேர், மர வகைகளால் லாபமுண்டு. பழைய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மீனம்:
இன்று வாடிக்கையாளர்களின் தேவையறிந்து கொள்முதல் செய்வீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். புதிய முதலீடுகளை செய்வதுடன் கடையை விரிவுபடுத்தி போட்டியாளர்களை திகைக்கச் செய்வீர்கள். ஷேர், மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். வேலையாட்கள் முழு ஒத்துழைப்பு தருவார்கள். புது வேலையாட்களையும் பணியில் அமர்த்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்களுக்கு கடன் பாக்கிகள் வசூலாகும்! - இன்றைய ராசி பலன்கள் (17.02.2025)!