Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த ராசிக்காரர்களுக்கு நீண்ட கால பிரச்சினைகளில் முடிவு கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (16.02.2025)!

Advertiesment
astro

Prasanth Karthick

, ஞாயிறு, 16 பிப்ரவரி 2025 (06:01 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
 
மேஷம்:
இன்று ஒவ்வாமை போன்ற தொந்தரவுகள் ஏற்படும். உணவில் மிகுந்த கட்டுப்பாடு தேவை. பெண்கள் சமையலறை பொருட்களை சுகாதாரமாகக் கையாள வேண்டும். பெண்களுக்கு தாய்வழி உறவுகளின் மூலம் லாபம் உண்டு. புதிய மணப்பெண்களுக்கு தாய்மைப் பேறு ஏற்படும். அயல்நாட்டு செல்லும் முயற்சிகளில் ஈடுபடுவோர் முன்பணம் தந்து ஏமாற வேண்டாம். வியாபாரிகளுக்கு லாபகரமான பொருட்களில் முதலீடு கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5

ரிஷபம்:
இன்று ஹோட்டல் தொழில் செய்பவர்கள் அதனை விரிவுபடுத்த ஏற்ற நேரம் இதுவே. உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த உயர் பொறுப்பு நிச்சயம் கிட்டும். தொட்டதெல்லாம் பொன்னாகும். குடும்பப் பொறுப்பு, மனைவியின் ஆலோசனையை மதித்தல், பொறுமை ஆகியவற்றால் நன்மைகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

மிதுனம்: 
இன்று உப்பு சப்பில்லாத விஷயத்திற்குக்கூட மனைவியுடன் சண்டை சச்சரவுகள் வரும். விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. மனைவிவழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். மகனுக்கோ, மகளுக்கோ வாழ்க்கைத்துணை தேடுபவர்கள் நிச்சயதார்த்தத்திற்கும் திருமணத்திற்கும் அதிக இடைவெளி தராமல் உடனே முடிப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

கடகம்:
இன்று சில நன்மைகள் ஏற்பட்டாலும் சிற்சில சங்கடங்களும் ஏற்படலாம். பெரியோர் ஆசீர்வாதங்களும் தெய்வ சிந்தனையும் உங்களை இடரிலிருந்து காக்க உதவும். தொழில் மேன்மை தடைபடாது. வீடு, நிலம் போன்றவற்றில் ஏதேனும் வில்லங்கம் இருந்தால் அதனை சமாதான முறையில் தீர்த்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

சிம்மம்:
இன்று பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். மனைவி வெகுநாட்களாக கேட்டுக் கொண்டிருந்த தங்க ஆபரணங்களை இப்போது வாங்கிக் கொடுப்பீர் கள். குடும்பத்தில் உங்கள் பேச்சிற்கு மரியாதை கூடும். உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்குகள் வெற்றியடையும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். கடையை வேறிடத்திற்கு மாற்றுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

கன்னி:
இன்று பொருளாதார சிக்கல்கள் விலகும். விவசாயிகளுக்கு புதியதோர் உற்சாகம் பிறக்கும். வியாபாரம் செழிப்படையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறைகள் ஏற்பட்டு மறையும். எதிலும் உஷாராக இருப்பது நல்லது. பெரியோர்களின் ஆசிர்வாதங்களைப் பெற்று எந்த காரியத்தையும் ஆரம்பியுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6

துலாம்:
இன்று சில நன்மைகள் ஏற்பட்டாலும் சிற்சில சங்கடங்களும் ஏற்படலாம். பெரியோர் ஆசீர்வாதங்களும் தெய்வ சிந்தனையும் உங்களை இடரிலிருந்து காக்க உதவும். தொழில் மேன்மை தடைபடாது. வீடு, நிலம் போன்றவற்றில் ஏதேனும் வில்லங்கம் இருந்தால் அதனை சமாதான முறையில் தீர்த்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

விருச்சிகம்:
இன்று அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் கௌரவம் உயரும். சமுதாயத்தில் அந்தஸ்து உண்டாகும். உங்களின் முயற்சிகள் உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

தனுசு:
இன்று தேவை இல்லாத மனக் குழப்பத்திற்கும், வீணான பிரச்சனைகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள். குடும்பத்திற்கு அவப்பெயர் வராமலிருக்க பிள்ளைகளை கண்காணிப்பது அவசியம். சுபகாரியங்கள் தடைபடாமல் நடக்க தகுந்த பிரார்த்தனைகளை செய்ய வேண்டியது அவசியம். தெய்வ காரியங்களை மேற்கொள்வதில் சில சிக்கல்கள் வராமல் இருக்க குலதெய்வ வழிபாடும் முக்கியம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7

மகரம்:
இன்று பயறு வகைகளில், பனை பொருட்களில் நல்ல வருவாய் கிடைக்கும். பண்ணைகளில் வேலை செய்பவர்கள் சிறந்த பலனைக் காணலாம். கால்நடைச் செல்வங்கள் பெருகும். பூர்வீகச் சொத்தின் பேரில் இருக்கும் கடன் தீரும். அதில் இருக்கும் வில்லங்கமும் விலகும். விவசாய நிலங்களுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கும்.  பயிர்கள் சேதம் அடைவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5

கும்பம்:
இன்று சொத்து வரி, வருமான வரி எதுவாக இருந்தாலும் தாமதிக்காமல் செலுத்தி விடுங்கள். சட்டத்திற்குப் புறம்பாக எந்த வேலையையும் செய்ய வேண்டாம். திடீர் யோகம், பணவரவு எல்லாம் உண்டு. பிரபலங்களின் உதவி கிடைக்கும். வெளிமாநில புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். நொறுக்குத் தீனிகளை குறையுங்கள். மாதவிடாய்க் கோளாறு சரியாகும். கல்யாணம் கூடிவரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5

மீனம்:
இன்று அழகான நல்ல கணவர் வந்தமைவார். ஆடை அணிகலன்கள் சேரும். தடைபட்ட கல்வியை தொடர்வார்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். தூக்கமின்மை, கனவுத் தொல்லை வந்துபோகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

`வாராங்கல் பத்மாட்சியை கும்பிட்டால் வேண்டும் வரம் கிடைக்கும்..!