இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
மேஷம்:
இன்று குடும்பங்களில் குழந்தை பாக்யம் சந்தோஷப்படுத்தும். அரசுத் துறையில் பணி இடை நீக்கம் பெற்றவர்கள் மீட்சி பெறுவர். அரசியல்வாதிகள் தங்கள் மேலுள்ள வழக்குகளின் முடிவுகளை தள்ளிப் போட முயற்சிப்பது நலம். பொதுவாக தொல்லைகளும் பிரிவினையும் நீங்கி ஒற்றுமையும் உயர்வும் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
ரிஷபம்:
இன்று சுபவிசேஷங்கள் தாமாக நடக்கும்; கவலைப் படாதீர்கள். திருமண வாய்ப்புகள் திடீரென பலிதமாகும். குடும்பப் பெண்களுக்கு தாய்வழி சொத்துகள் லாபமாகும். வங்கிக் கணக்குகளின் இருப்பு அதிகரிக்கும். கூட்டுத் தொழில் புரிபவர்கள் நல்ல லாபம் பெறுவர். கமிஷன் தொழில், பங்கு, வர்த்தகம், ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்தவர்கள் நல்ல லாபம் பார்க்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9
மிதுனம்:
இன்று உறவினர்கள் சிலர் உங்களுக்குள் வீண் வம்புச் சண்டையை ஏற்படுத்தக் கூடும். லாகிரி வஸ்துக்களை தவிர்ப்பது நல்லது. நடைப்பயிற்சி, யோகா, தியானம் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். சனிபகவான் ராசியைப் பார்ப்பதால் புதிய நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். யாருக்கும் ஜாமீன், காரண்டர் கையெழுத்திட வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
கடகம்:
இன்று உங்களுடைய அந்தஸ்திற்கு சோதனை வரலாம். அதிகப்படியான செலவுகள் செய்ய வேண்டிய சூழ்நிலைகள் வரலாம். உங்களுடைய உறுதியும், கொள்கைப் பிடிப்பும் தளர்வதற்க்குண்டான நிலை வரலாம். எந்த ஒரு காரியமும் தாமதத்திற்க்கு உள்ளாவது தவிர்க்க முடியாமல் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
சிம்மம்:
இன்று சுயமாக தொழில் செய்யும் வல்லமையையும் கொடுப்பார். குழந்தை இல்லையே என வருந்திய தம்பதியருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். துரோகிகளைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 6
கன்னி:
இன்று கூட்டுத் தொழிலில் ஈடுபாடு உள்ளவர்கள் அதிகம் லாபம் பெறுவார்கள். பிள்ளைகளால் சந்தோஷங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடி வரும். தாய் உடல் நலனில் கவனம் செலுத்தி வருவது அவசியமாகும். தெற்கு, தென்கிழக்கு திசைகள் அனுகூலம் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6
துலாம்:
இன்று குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். உறவினர் மூலம் நன்மை உண்டாகலாம். பெண்களுக்கு காரிய தடைகள் விலகும். கலைத்துறையினருக்கு ஓய்வில்லாமல் உழைக்க நேரும். லாபம் பெருகும். அரசியல் துறையினருக்கு மேலிடத்துடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6
விருச்சிகம்:
இன்று உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். புதிய வாடிக்கையாளர்களையும், புதிய சந்தைகளையும் நாடிச் செல்வீர்கள். முழுவதும் கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் சிரமங்கள் உண்டாகாது. விவசாயிகளுக்கு நீர்வரத்து நன்றாக இருக்கும். எனவே குறித்த காலத்தில் விதைத்து அறுவடை லாபத்தை அள்ளுங்கள். விளை பொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும். அதேசமயம் கால்நடைகளால் பலன்கள் உண்டாகாது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9
தனுசு:
இன்று குடும்பத்தில் ஏதேனும் சண்டை சச்சரவுகள் வந்தால் அதனைப் பெரிதாக்க வேண்டாம். விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளவும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு நினைத்த இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். கர்ப்பிணிப் பெண்கள் கவனமுடன் தங்களைக் கவனித்துக் கொள்ளவும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5
மகரம்:
இன்று சகஊழியர்கள் உங்களிடம் ஒத்துழைக்காமல் தன்னிசையாக செயல்படலாம். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். ஏனெனில் அவர்கள் செய்யும் தவறுக்கு நீங்கள் ஆளாக நேரிடலாம், அதனால் தண்டனையும் கிடைக்கப் பெறலாம். விவசாயிகள் புதிய சொத்து வாங்கி அதனை திருத்தம் செய்வார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6
கும்பம்:
இன்று மனைவிவழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். மகனுக்கோ, மகளுக்கோ வாழ்க்கைத்துணை தேடுபவர்கள் நிச்சயதார்த்தத்திற்கும் திருமணத்திற்கும் அதிக இடைவெளி தராமல் உடனே முடிப்பது நல்லது. செல்போனில் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்குவதையோ, சாலையை கடப்பதையோ தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6
மீனம்:
இன்று கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வீடு வந்து சேரும். பயணங்களால் ஆதாயம் உண்டு. அடிக்கடி தொந்தரவு தந்த வாகனம் இனி சீராக ஓடும். தேங்கிக் கிடந்த வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சலும் டென்ஷனும் இருக்கும். அவர்களின் போக்கையும் நண்பர்கள் வட்டத்தையும் கண்காணியுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9