பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

Siva
வெள்ளி, 10 அக்டோபர் 2025 (18:01 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாததற்கு வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
 
வெனிசுவேலாவின் ஜனநாயக உரிமை போராளியான மரியா கொரினா மச்சாடோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்ததாக பெருமை பேசும் டிரம்ப் ஏமாற்றமடைந்துள்ளார்.
 
வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஸ்டீவன் சியுங், நோபல் தெரிவுக் குழுவின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், "அதிபர் டிரம்ப் பல போர்களை முடிவுக்குக் கொண்டுவந்து, உயிர்களைக் காப்பாற்றினார். அவருக்கு நோபல் மறுக்கப்பட்டது, அக்குழுவினர் 'அமைதியை விட அரசியலுக்கு முக்கியத்துவம்' கொடுக்கிறார்கள் என்பதை நிரூபிக்கிறது" என்று நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். 
 
டிரம்ப் மனிதாபிமானமிக்கவர் என்றும், அவரை போல யாரும் இல்லை என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சொதப்பும் தவெக?!.. ஈரோட்டில் 75 ஆயிரம் பேர் கலந்துகொள்ள முடியுமா?...

தவெகவின் சின்னம் எனக்கு தெரியும்.. ஆனால் வெளியே செல்லக்கூடாது.. செங்கோட்டையன்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் இன்று கும்பாபிஷேகம்.. குவியும் பக்தர்கள்..!

உலகின் இன்னொரு போர்.. தாய்லாந்து கம்போடியா நாடுகளில் தாக்குதல்..!

பணி நேரத்திற்கு பிறகு மின்னஞ்சலுக்கு பதிலளிக்க தேவையில்லை.. மக்களவையில் மசோதா..!

அடுத்த கட்டுரையில்
Show comments