7 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை: மெக்ஸிகோ அருகே பயங்கர நிலநடுக்கம்!

7 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை: மெக்ஸிகோ அருகே பயங்கர நிலநடுக்கம்!

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (11:20 IST)
மெக்ஸிகோ அருகே தென் பசிபிக் பெருங்கடலில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 8-ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 7 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


 
 
இந்த பயங்கரமான நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லை. அதே நேரத்தில் மெக்ஸிகோ தலைநகரான மெக்ஸிகோ சிட்டி இந்த நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
கடலில் 35 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வை மெக்ஸிகோவின் பல பகுதி மக்கள் உணர்ந்ததாகவும், கட்டிடங்கள் குலுங்கியதாகவும் கூறப்படுகிறது. மக்கள் பதற்றத்தால் வீதிகளுக்கு ஓடி வந்தனர். இதனால் மெக்ஸிகோவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
 
மேலும் கடலின் 35 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், மெக்சிகாத, கவுதமாலா, எல் சால்வடார், கோஸ்டாரிகா, நிகாரகுவா, பனாமா மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments