Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அசைவம் சாப்பிடும் வினாயகர் - விளம்பரத்தால் ஏற்பட்ட சர்ச்சை

Advertiesment
அசைவம் சாப்பிடும் வினாயகர் - விளம்பரத்தால் ஏற்பட்ட சர்ச்சை
, வியாழன், 7 செப்டம்பர் 2017 (12:10 IST)
ஆஸ்திரேலிய இறைச்சி நிறுவனம் ஒன்று சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு விளம்பர வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஆஸ்தியேலியாவில் உள்ள லைவ்ஸ்டாக் என்ற இறைச்சி விற்பனை செய்யும் நிறுவனம் சமீபத்தில் ஒரு விளம்பர வீடியோவை வெளியிட்டது. அதில்,  விநாயகர், இயேசு, புத்தர், ஜூலியஸ் சீசர் உள்ளிட்டோர் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்துவகின்றனர். சாப்பாட்டு மேஜையில் ஏராளமான ஆட்டுக்கறி இருக்கிறது. மேலும், 2 நிமிடம் பேசிக்கொண்டிருக்கும் அவர்கள் இறுதியில் ஆட்டுக்கறி சாப்பிடுவோம் எனக் கூறுகின்றனர்.

webdunia

 

 
இந்த விளம்பரத்தை கண்ட பலரும் அந்த நிறுவனம் இந்துக்களின் மத உணர்வை புண்படுத்திவிட்டதாக கருத்து கூறி வருகின்றனர். ஆஸ்தியேலியாவின் இந்து மத கவுன்சில் தனது முகநூல் பக்கத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 
விளம்பரத்திற்காக அனைத்து மதக் கடவுளையும் அந்த நிறுவனம் தவறாக சித்தரித்துள்ளது என சமூக வலைத்தளங்களில் பலரும் புகார் கூறி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனிதா மூளை சலவை செய்யப்பட்டு தற்கொலை செய்துள்ளார்: கிருஷ்ணசாமி வீசும் புதிய குண்டு!