Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த அறிவு ஜீவிதான் தமிழக அரசியல் குழப்பத்துக்க காரணம்: விளாசும் சுப்பிரமணியன் சுவாமி!

அந்த அறிவு ஜீவிதான் தமிழக அரசியல் குழப்பத்துக்க காரணம்: விளாசும் சுப்பிரமணியன் சுவாமி!

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (10:21 IST)
தமிழக அரசியல் குறித்தும், தமிழக பிரச்சனைகள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தமிழகத்தில் நிலவும் அரியல் குழப்பத்துக்கு அறிவு ஜீவி ஒருவர் தான் காரணம் என கூறியுள்ளார்.


 
 
பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பத்துக்குப் பின்னால் பாஜகதான் செயல்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது குறித்து கருத்து கேட்கப்பட்டது.
 
இதற்கு பதில் அளித்த சுப்பிரமணியன் சுவாமி, இதன் பின்னணியில் பாஜக இல்லை. தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டு அமைச்சர்கள் தான் காரணம். அவர்களில் ஒருவர் தான் இப்போது அமைச்சராக இருக்கிறார். அவரும், சென்னையில் இருக்கிற அறிவு ஜீவி ஒருவரும்தான் வம்பு செய்கிறார்கள்.
 
நான் இந்தப் பக்கம் இருக்கிறேன். அவர்கள் அந்தப் பக்கம் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் எப்படி பாஜக பின்னணியில் இருக்கிறது என்று சொல்ல முடியும் என்றார். தொடர்ந்து யார் அந்த அறிவு ஜீவி என்று செய்தியாளர்கள் கேட்டபோது, தமிழ்நாட்டில் நிறைய அறிவு ஜீவிகள் இருக்கிறார்கள் என்று மழுப்பலாக பதில் அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments