மூன்றாவது உலகப்போர் வேணாம்னு நினைக்கிறேன்!? - ட்ரம்ப்க்கு ரகசிய எச்சரிக்கை விடுத்த ரஷ்யா!

Prasanth Karthick
புதன், 28 மே 2025 (13:17 IST)

சமீபமாக உலக நாடுகள் விவகாரங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்யா விவகாரத்திலும் அப்படி பேசியதால் பதிலடி கொடுத்துள்ளார் முன்னாள் ரஷ்ய அதிபர். 

 

அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் பல சட்டத்திட்டங்களை மாற்றி வருவதுடன் இஸ்ரேல் - ஹமாஸ் போர், ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை அதிகப்படுத்துகிறார்.

 

சமீபத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலை பேசி தீர்த்து வைத்ததே நான்தான் என அவர் தொடர்ந்து பேசி வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு இந்தியா தகுந்த விளக்கத்தையும் அளித்தது. இந்நிலையில் அடுத்து ரஷ்யா பிரச்சினையில் வாயை விட்ட ட்ரம்ப் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.

 

ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து பேசிய ட்ரம்ப் “நான் இல்லையென்றால் ரஷ்யாவிற்கு பல மோசமான விஷயங்கள் நடந்திருக்கும். அதை புதின் உணர்ந்து கொள்ளாமல் இருக்கிறார். அவர் நெருப்போடு விளையாடுகிறார்” என பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள முன்னாள் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வெடவ் “எனக்கு தெரிந்த ஒரே மோசமான விஷயம் மூன்றாம் உலகப்போர் தான். இது ட்ரம்புக்கு புரியும் என நினைக்கிறேன்” என எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார்.

 

உலக நடப்புகளில் தானே சென்று தலையை விட்டு கருத்தும் சோல்லும் ட்ரம்ப்பின் செயல்பாடு சர்வதேச அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments