Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வகுப்புக்கு செல்லவில்லை என்றால் விசா ரத்து: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Advertiesment
அமெரிக்கா

Mahendran

, செவ்வாய், 27 மே 2025 (17:53 IST)
அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப் நிர்வாகம் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவர்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில்,  இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய அறிவுரையை வெளியிட்டது.
 
புதிய வழிகாட்டுதலின்படி, வகுப்புகளை தவிர்க்கும் மாணவர்கள் அல்லது தங்கள் கல்வியை தொடராமல் அறிவிப்பு இன்றி விலகும் மாணவர்களின் விசா ரத்து செய்யப்படும் என்றும், எதிர்காலத்தில் எந்தவொரு அமெரிக்க விசாவிற்கும் விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகலாம் என்றும் எச்சரித்துள்ளது.
 
டிரம்பின் தீவிர நாடுகடத்தல் நடவடிக்கையின் போது, அமெரிக்காவில் உள்ள பல கல்வி நிறுவனங்களும், விசா ரத்து அபாயத்தை தவிர்க்க வெளிநாட்டு மாணவர்கள் நாட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தின.
 
மேலும், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகமும் ஒரு எச்சரிக்கையை  வெளியிட்டது. அதில் நீங்கள் அனுமதிக்கப்பட்ட தங்கும் காலத்தை மீறி அமெரிக்காவில் தங்கினால், நாடு கடத்தப்பட வாய்ப்புள்ளது. மேலும், எதிர்காலத்தில் அமெரிக்கா செல்வதற்கான நிரந்தர தடையும் விதிக்கப்படும்," என அமெரிக்க தூதரகம் தனது ட்விட்டரில் தெரிவித்தது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு மாணவியின் பதிவு காரணமாக தேசிய நலனே பாதிக்கப்பட்டுவிடுமா? நீதிமன்றம் சரமாரி கேள்வி..