ஜனநாயகன் இசை வெளியீட்டு நிகழ்ச்சியா… இல்லை கான்செர்ட்டா?.. குழம்பும் ரசிகர்கள்!

vinoth
வியாழன், 27 நவம்பர் 2025 (11:24 IST)
முழுநேர அரசியல்வாதியாகியுள்ள விஜய் தற்போது ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த படம்தான் தனது கடைசிப் படம் என அறிவித்துள்ளார். அதனால் படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க முக்கிய வேடங்களில் மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழகத் திரையரங்க விநியோக உரிமை இதுவரை எந்த தமிழ்ப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து டிசம்பர் 27 ஆம் தேதி மலேசியாவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் அதை வெறும் இசை வெளியீட்டு விழாவாக மட்டுமில்லாமல் ஒரு இசைக் கச்சேரியாகவும் நடத்தத் திட்டமிட்டுள்ளது. அதில் கலந்து கொண்டு பாடவுள்ள பாடகர்கள் பற்றிய விவரத்தை வெளியிட்டு வருகிறது. இதனால் இது ஜனநாயகன் படத்தின் இசை வெளியீடா அல்லது இசைக் கச்சேரியா என்று ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.  நிகழ்ச்சிக்கு விஜய் வருவாரா வரமாட்டாரா என்றும் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எம்ஜிஆரையே எதிர்த்து கேள்வி கேட்டவரு மகேந்திரன்.. அவர பத்தி ராஜகுமாரனுக்கு என்ன தெரியும்?

நிதி அகர்வாலின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

டியூட் படத்தில் இருந்து ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்கவேண்டும்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தி படத்துக்காக மூன்று மடங்கு சம்பளத்தைக் குறைத்துக் கொண்டாரா தனுஷ்?

அடுத்த கட்டுரையில்
Show comments