அந்த வார்த்தையை எல்லாம் படத்தில் வைக்க முடியாது… சென்ராயனுக்கு கீர்த்தி சுரேஷ் பதில்!

vinoth
வியாழன், 27 நவம்பர் 2025 (10:56 IST)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் மலையாள சினிமாவில் தனது திரை வாழ்க்கையை தொடங்கினாலும் இப்போது இந்தி சினிமா வரை உயர்ந்துள்ளார். அவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படம் நாளை தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸாகிறது. இந்த படத்தை சந்துரு இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்தது. அதில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள சென்ராயன் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் “நான் இந்த படத்தில் சென்னையில் அதிகமாகப் பயன்படுத்தும் வார்த்தை ஒன்றை கஷ்டப்பட்டு பேசி நடித்தேன். ஆனால் டிரைலரில் பார்க்கும் போது அந்த வார்த்தை இல்லை. சென்சாரில் ம்யூட் செய்ய சொல்லிவிட்டார்கள். இப்போது பார்க்கையில் எனக்கு அழுகையாக வருகிறது” எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து பேசிய கீர்த்தி “சென்ராயன் நீங்கள் வருத்தப்படுவதற்கான அவசியம் இல்லை.  கண்டிப்பாக அந்த வார்த்தையை படத்தில் வைக்கமுடியாது. ஆனால் நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்பது தெரிந்துவிடும். அந்த வார்த்தைதான் உங்கள் திறமையை வெளிப்படுத்தும் என்பது கிடையாது.” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் என்ன செஞ்சேன்?.. என்னை மோசமானவன் போல காட்டிவிட்டீர்களே! கங்கை அமரன் ஆதங்கம்!

அஞ்சான் தோல்விக்குப் பொறாமையும் ஒரு காரணம்… wanted ஆக வண்டியில் ஏறும் இயக்குனர் லிங்குசாமி !

வா வாத்தியார் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடக்கம்… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த டான்ஸரா?... ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட கீர்த்தி சுரேஷ்!

ரிவால்வர் ரீட்டா ஆக்‌ஷன் படம்தான்… ஆனா குடும்பத்தோட பாக்கலாம் – கீர்த்தி சுரேஷ் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments