Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

“விடுதலை தாமதம் ஆக இதுதான் காரணம்…” இயக்குனர் வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

Advertiesment
“விடுதலை தாமதம் ஆக இதுதான் காரணம்…” இயக்குனர் வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!
, திங்கள், 5 செப்டம்பர் 2022 (08:30 IST)
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.

கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட விடுதலை இந்த படத்தை முதலில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர்.

ஆனால் அனைவரும் பிஸியான நடிகர்களாக இருப்பதால், அவர்களின் தேதிகளைப் பெறுவதில் சிக்கல் எழுந்தது. சமீபத்தில் கடைசி கட்ட ஷூட்டிங் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதிகளில் நடந்தது. அதோடு மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது வெற்றிமாறன் படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது. இந்த அதிகாரப்பூர்வமற்ற தகவலை இப்போது படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் தாமதம் குறித்து பேசியுள்ள இயக்குனர் வெற்றிமாறன் “அடர்ந்த காட்டுப் பகுதிகளில் ஷூட்டிங் நடப்பதால் வழக்கமாக ஒரு நாளில் முடிப்பதை இங்கு மூன்று நாட்கள் எடுக்க வேண்டி உள்ளது. அதனால் தான் இந்த தாமதம்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“எனது ஆரம்பகால நாட்களை ஞாபகப்படுத்தியது…” பா ரஞ்சித் படம் பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்!