Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சினிமா சான்ஸ் ஆசைக்காட்டி ஆபாசப்படம்! 300 பெண்களை வலையில் வீழ்த்திய போலி இயக்குனர்!

Advertiesment
abuse
, ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (13:53 IST)
சேலத்தில் சினிமா ஆசைக்காட்டி இளம்பெண்களை ஆபாசப்படம் எடுத்த இயக்குனர் வேல்சத்ரியன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் ஏவிஆர் ரவுண்டானா பகுதியில் சினிமா கம்பெனி ஒன்றில் வேலை பார்த்த பெண் ஒருவர் எடப்பாடியை சேர்ந்த இயக்குனர் வேல்சத்ரியன் என்பவர் ஆபாசமாக படமெடுத்து மிரட்டுவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸாருக்கு மேலும் பல அதிர்ச்சிக்குரிய சம்பவங்கள் தெரிய வந்துள்ளன. இயக்குனர் வேல்சத்ரியன் என்ற அந்த நபர் சமீபத்தில் தான் எடுக்க உள்ள திரைப்படத்தில் நாயகியாக நடிக்க இளம்பெண் தேவை என சமீபத்தில் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்துள்ளார்.

அதை நம்பி அவரை தொடர்பு கொண்ட இளம்பெண்கள் சிலரிடம் சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை காட்டி அவர்களை ஆபாசமாக படம் எடுத்துள்ளார். பின்னர் அதை வெளியிட்டு விடுவதாக மிரட்டி பலரிடம் பணமும் பறித்துள்ளார். பலர் வெளியே சொல்ல பயந்து அவருக்கு பணம் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் வேல்சத்ரியனையும் அவரது உதவியாளரான ஒரு பெண்ணையும் கைது செய்துள்ளனர். அவர்கள் அலுவலகத்தில் இருந்த ஹார்ட் டிஸ்க்குகள், டிவிடி, லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வேல்சத்ரியனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் காவல் நிலையத்திற்கு வந்து புகாரளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழர்களுக்கு வேலை கொடுக்காத என்.எல்.சி நிறுவனத்தை இழுத்து மூடுவோம்: அன்புமணி ராமதாஸ்