Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 12 January 2025
webdunia

தெலுங்கு அட்லியா ராஜமெளலி? வைரல் வீடியோ ரசிகர்கள் ஷாக்

Advertiesment
bagubali
, வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (13:48 IST)
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர் ராஜமெளலி. இவர் இயக்கி பல படங்கள் ஹிட் ஆன நிலையில், அதில் முக்கியமானது பாகுபலி1, பாகுபலி 2 ஆகிய படங்கள் ஆகும்.

கடந்த 2015 ஆம் ஆண்டு பாகுபலி 1 படம் வெளியானது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர். வசூல் சாதனை படைத்த இப்படத்தின் 2 ஆம் பாகமும் மிகப்பெரிய சாத்னை படைத்தது.

இந்த நிலையில், பாகுபலி படத்தில் இடம்பெற்ற காட்சிகள் அனைத்தும்,அவதார், 300 ,தி மித், கிங் காங், அவெஞ்சர்ஸ்,ஹெர்குலஸ், பேட்மேன் விஸ் சூப்பர் மேன், II, x men origins wolverine, Lotr, God of war,, hell boy, hulk, wonder women, marcopolio, avengers age, thor dark world, The lion king, captain America, உள்ளிட்ட படங்களில் இடம்பெற்ற பிரபல காட்சிகளை அப்படியே தன் படங்களில் அமைத்துள்ளதாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

தமிழில் அட்லி பிரபல சினிமாக்களில் இருந்து தனக்குப்பிடித்த காட்சிகளை அப்படியே தன் படங்களில் பயன்படுத்துவது மாதிரி, ராஜமெளலியும் ஹாலிவுட் சினிமாவில் இடம்பெற்ற காட்சிகளைப் பயன்படுத்தியுள்ளதாகவும் அதனால் அவர் தெலுங்கு சினிமாவில் ‘அட்லி’ என கூறி வருகின்றனர்.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் போன்ற நடிகருடன் நடிக்கலாம் – மனம் திறந்த அருண் விஜய்!