Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடாமுயற்சி கதைத் திருட்டு சர்ச்சைக்கு முடிவு… விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth
புதன், 15 ஜனவரி 2025 (08:35 IST)
அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தைத் திரையில் பார்க்கும் ஆர்வத்தில் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தன. ஆனால் திடீரென்று லைகா நிறுவனம் படம் பொங்கலுக்கு ரிலீஸாகாது என அறிவித்துள்ளது.

அதற்குக் காரணமாக சொல்லப்பட்டது ‘விடாமுயற்சி பிரேக்டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்றும் அது சம்மந்தமாக தயாரிப்பு நிறுவனத்திடம் முதலிலேயே அதிகாரப்பூர்வமாக கதை உரிமையைப் பெறவில்லை என்பதால் தயாரிப்பு நிறுவனமான பேரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகை கேட்டு லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும்’ சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டு விட்டதாகவும் பேரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஒரு அதிகாரப்பூர்வ மின்னஞ்சலுக்காக காத்திருப்பதாகவும் அது வந்ததும் படத்தின் ரிலீஸ் தேதியோடு கூடிய டிரைலர் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி கதைத் திருட்டு சர்ச்சைக்கு முடிவு… விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கேம்சேஞ்சர் படத்தைக் கலாய்த்து பதிவிட்ட ராம் கோபால் வர்மா!

கங்கனாவின் ‘எமர்ஜென்ஸி’ படத்துக்கு தடை விதித்ததா பங்களாதேஷ்?

சந்தானம் மீண்டும் காமெடியனா நடிக்கணுமா?... லொள்ளு சபா மாறன் சொன்ன பதில்!

1000 கோடி ரூபாய் கலெக்ட் பண்ணும்னு சொல்லி மாட்டிக்க விரும்பல… ப்ரஸ் மீட்டில் உஷாராக பேசிய சுந்தர் சி!

அடுத்த கட்டுரையில்
Show comments