துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸில் அஜித்தின் “அஜித்குமார் ரேஸிங்” அணி மூன்றாவது இடத்தை பெற்றதையடுத்து அஜித்துக்கும் அவரது அணிக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அஜித்தின் சக நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
துபாய் 24 ஹெச் கார் ரேஸில் அஜித்தின் அணி கலந்து கொண்ட நிலையில் கடைசி நேரத்தில் அஜித் இந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை. அவரது அணியின் மற்ற உறுப்பினர்கள் தொடர்ந்து 24 மணிநேரத்தில் அதிக தூரத்தைக் கடந்த அணிகளின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தனர். இதையடுத்து அஜித் குமாருக்கு தமிழ் சினிமாவில் இருந்து அரசியல் தலைவர்கள் மத்தியில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதையடுத்து அஜித் அளித்த ஒரு நேர்காணலில் ரசிகர்கள் சண்டை போட்டுக் கொள்வது பற்றியும் சமூகவலைதளங்களின் தாக்கம் குறித்தும் பேசியுள்ளார். அதில் “படங்களைப் பாருங்கள் ரசியுங்கள்.. எல்லாம் ஓகே… ஆனால் இந்த அஜித் வாழ்க… விஜய் வாழ்க… நீங்க எப்போ வாழப் போறீங்க. வாழ்க்கை மிக சிறியது. அதனால் வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள். நான் சந்தோஷமாக வாழுகிறேன். என் ரசிகர்களும் சந்தோஷமாக வாழுகிறார்கள் என்றால்தான் எனக்கும் மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.