Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதிய சாதனை படைக்க தூண்டுதலாக உள்ளது.. அஜித்தின் நன்றி அறிவிப்பு..!

Advertiesment
அஜித்

Siva

, செவ்வாய், 14 ஜனவரி 2025 (11:36 IST)
சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேஸ் போட்டியில் அஜித்தின் அணி மூன்றாவது இடத்தை பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நிலையில் தென்னிந்திய அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி கூறி அஜித் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
அன்பான அனைவருக்கும் வணக்கம்!
 
துபாய் கார் பந்தய ரேஸின் போதும் நிகழ்வுக்கு பின்னரும் இப்போதும் எப்போதும் நீங்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மகிழ்ச்சி
அளிக்கிறது. எல்லாம் வல்ல இறைவன், எனது குடும்பத்தினர், திரைத்துறையினர், ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டுப் பிரமுகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை.
 
இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும்தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது. என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார்ஸ்போர்ட்டில் புதிய சாதனைகள் படைக்கவும் தூண்டுதலாக உள்ளது. இந்த பயணம் என்னைப் பற்றியது மட்டுமல்ல! உங்களைப்
பற்றியதும்தான். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன்.
 
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துக்கள்!
நன்றி!
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துருவ நட்சத்திரம் சிக்கலில் மாட்டிய போது யாருமே கண்டுக்கலை… கௌதம் மேனன் ஆதங்கம்!