அஜித்தின் வெற்றிக்கு திராவிட மாடல் அரசு காரணம் என்றால் இங்கு மைக் உள்ளது. அதனால் காறி துப்ப முடியாது; வெளியே சென்ற பிறகு காரி துப்புவேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் நடந்த கார் ரேஸ் போட்டியில் அஜித்தின் அணி மூன்றாவது இடத்தை பிடித்து, இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நிலையில், அவருக்கு மத்திய அமைச்சர்கள் முதல் மாநில அமைச்சர்கள் வரை, திரையுலக பிரபலங்கள் முதல் தொழிலதிபர்கள் வரை வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அஜித்துக்கு ஏற்கனவே தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை, நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, இது குறித்த கேள்விக்கு பதிலளித்தார். "அஜித் எந்த காட்பாதர் இல்லாமல் சினிமாவில் முன்னுக்கு வந்தவர். உதயநிதி ஸ்டாலின் போல சந்தானம் உதவி மூலம் அவர் சினிமாவில் வரவில்லை," என்றும் அவர் கூறினார்.
மேலும், "அஜித்தின் வெற்றிக்கு திராவிட பாடல் அரசு காரணம் என்றால், இங்கு மைக் உள்ளது. அதனால் காரி துப்ப முடியாது; வெளியே சென்ற பிறகு காரி துப்புவேன். அரசியலுக்கு தகுதியே இல்லாத நபர் உதயநிதி," என்றும் அவர் கூறினார்.