Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேம்சேஞ்சர் படத்தைக் கலாய்த்து பதிவிட்ட ராம் கோபால் வர்மா!

vinoth
புதன், 15 ஜனவரி 2025 (08:23 IST)
ஆர் ஆர் ஆர் படத்துக்குப் பிறகு ராம்சரண் நடிப்பில் உருவான கேம்சேஞ்சர் படத்தை ஷங்கர் இயக்க தில் ராஜூ தயாரித்து சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ் செய்தனர். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார். தமன் முதல் முதலாக ஷங்கர் படத்துக்கு இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் மிக அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி ரிலீஸானது. முதல் நாளில் உலகளவில் 186 கோடி ரூபாய் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கலவையான விமர்சனங்களால் வசூலில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இதனால் கேம்சேஞ்சர் லாபமீட்டும் படமாக அமையுமா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் கேம்சேஞ்சர் படத்தைக் கலாய்த்து பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா பதிவிட்டுள்ளார். அதில் “கேம்சேஞ்சர் படத்தின் பட்ஜெட் 450 கோடி என்று சொல்லப்படுகிறது. அப்படியென்றால் சிறப்பான விஷுவல் அனுபவம் தந்த ஆர் ஆர் ஆர் படத்தின் பட்ஜெட்டை 4500 கோடி ரூபாய் என சொல்லலாம். அதே போல கேம்சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் 186 கோடி ரூபாய் என்று சொன்னால் புஷ்பா 2 வசூல் 1860 கோடி ரூபாயாக இருக்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

இதன் மூலம் கேம்சேஞ்சர் படத்தை விட ஆர் ஆர் ஆர் மேக்கிங்கில் 10 மடங்கு சிறப்பாக இருந்ததாகவும், புஷ்பா 2 வசூல் 10 மடங்கு அதிகம் எனவும் கேலியான தொனியில் அவர் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படப்பிடிப்பில் ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்த வழக்கு… நீதிமன்றத்தில் ஆஜரான பா ரஞ்சித்!

பிரபாஸின் ராஜாசாப் படத்தில் முதியவராக சஞ்சய் தத்… படக்குழு வெளியிட்ட போஸ்டர்!

நண்பன் ரத்னகுமாருக்காக தயாரிப்பாளர் ஆகும் லோகேஷ் கனகராஜ்!

கூலி படத்தில் பிஸி… கிங்டம் படத்தின் பின்னணி இசையை ‘அவுட்சோர்ஸ்’ செய்யும் அனிருத்!

பீரியட் படமாக உருவாகிறதா தனுஷ் & விக்னேஷ் ராஜா இணையும் படம்?

அடுத்த கட்டுரையில்
Show comments