Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’தளபதி 67’: மாஸ்டர் கூட்டணி மீண்டும் இணைகிறதா?

’தளபதி 67’: மாஸ்டர் கூட்டணி மீண்டும் இணைகிறதா?
, திங்கள், 11 அக்டோபர் 2021 (08:48 IST)
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லலித் குமார் தயாரிப்பில் உருவான திரைப்படம் மாஸ்டர் 
 
இந்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் இரண்டிலும் சேர்த்து 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தளபதி விஜய்யின் 65வது படமான ‘பீஸ்ட்’ படத்தை நெல்சன் இயக்கி வருகிறார் என்பதும், 66வது படத்தை வம்சி இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை தில்ராஜ் தயாரிக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தளபதி விஜய்யின் 67வது படத்தை மீண்டும் மாஸ்டர் கூட்டணி இணைய உள்ளது. தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் லலித்குமார் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் வெளியாகும் என்று கூறப்படுவதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் ரூ.8 கோடி வசூலை நெருங்கிய ‘டாக்டர்’