Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நமிதாவின் கதையை எடிட் செய்யாமல் ஒளிபரப்பிய விஜய் டிவி: குவியும் பாராட்டுகள்

Advertiesment
நமிதாவின் கதையை எடிட் செய்யாமல் ஒளிபரப்பிய விஜய் டிவி: குவியும் பாராட்டுகள்
, வெள்ளி, 8 அக்டோபர் 2021 (14:32 IST)
நமிதாவின் கதையை எடிட் செய்யாமல் ஒளிபரப்பிய விஜய் டிவி: குவியும் பாராட்டுகள்
பிக் பாஸ் 3 சீசன் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்கள் ஒவ்வொருவராக தங்களது வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்கள், பட்ட கஷ்டங்கள், சந்தித்த சவால்கள் ஆகியவற்றை தெரிவித்து வருகின்றனர் 
அந்த வகையில் நேற்று திருநங்கை நமீதா தனது சொந்த கதையை கூறினார். அப்போது தான் திருநங்கையாக மாறிய போது தனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் பெற்றோர்களால் ஏற்பட்ட துன்பங்கள் வாங்கிய அடிகள் ஆகியவற்றை கதறி அழுதுகொண்டே தெரிவித்த அவர் அழுது கொண்டே ஒரு பாடலையும் பாடினார் 
 
திருநங்கை குறித்த அந்த பாடல் அனைவரையும் கண்ணீரை வரவழைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. நமீதாவின் கதையை கேட்ட பிரியங்கா உள்பட அனைத்து போட்டியாளர்களும் கண்ணீர் விட்டனர். மேலும் இதுவரை போட்டியாளர்களின் கதைகளை எடிட் செய்து ஒளிபரப்பிய விஜய் டிவியின் திருநங்கை நமீதாவின் கதையை எடிட் செய்யாமல் அப்படியே ஒளிபரப்ப்பியது திருநங்கைகளின் வலியை அனைவரும் புரிந்து கொள்ள உதவியதால் விஜய் டிவிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

SK இல்லாமல் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்ட் 2... ??