வாரனாசி படத்தில் மகேஷ் பாபுவை விட ராஜமௌலிக்கு சம்பளம் அதிகமா?

vinoth
செவ்வாய், 18 நவம்பர் 2025 (12:19 IST)
ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் ‘வாரனாசி’ படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்க, கீரவாணி இசையமைக்கிறார். வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் காடுகளை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. ஒரிசா மற்றும் கென்யாவில் அடர் காட்டுப் பகுதிகளில் ஷூட்டிங் நடந்த நிலையில் அடுத்த கட்டமாக வாரணாசி செட் அமைத்துக் காட்சிகளை எடுக்கவுள்ளார் ராஜமௌலி.

இந்நிலையில் சமீபத்தில் பிரம்மாண்டமாக இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இந்த படத்துக்காக ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபு ஆகிய இருவரும் பெறும் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ராஜமௌலி 200 கோடி ரூபாய் சம்பளம் மற்றும் இலாபத்தில் பங்கு என சம்பளம் வாங்கவுள்ளாராம். அதுபோல மகேஷ் பாபு 100 கோடி ரூபாய் சம்பளம் மற்றும் இலாபத்தில் பங்கு பெறவுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

‘வாரணாசி’ படவிழாவில் சர்ச்சை பேச்சு.. இயக்குனர் ராஜமெளலி மீது வழக்குப்பதிவு..!

எங்கள யாருனு நினைச்சீங்க? மைதானத்தில் ஆட்டம் காண வைத்த அஜித் மகன் மற்றும் SK மகள்

பாலகிருஷ்ணாவின் அடுத்த படத்தின் நாயகி நயன்தாரா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments