மணிரத்னம் படத்துக்குத் திரைக்கதை எழுதும் பா ரஞ்சித்தின் ஆஸ்தான எழுத்தாளர்!

vinoth
செவ்வாய், 18 நவம்பர் 2025 (12:07 IST)
தமிழ் சினிமாவில் சமீபகாலமாகதான் திரைக்கதை எழுத்தாளர்களின் முக்கியத்துவம் அங்கீகரிக்கப்படுகிறது. அந்த வரிசையில் இளம் திரைக்கதை எழுத்தாளராக கவனம் ஈர்த்து வருகிறார் தமிழ் ப்ரபா. பா ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை படம் மூலமாகக் கவனம் ஈர்த்த அவர் தொடர்ந்து ரஞ்சித் படங்களில் பணியாற்றி வருகிறார். விரைவில் அவர் இயக்குனராகவும் தனது முதல் படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் அவர் தான் மணிரத்னத்தின் அடுத்த படத்துக்கு திரைக்கதை எழுதவுள்ளதாக அறிவித்துள்ளார். இது சம்மந்தமான அவரது சமூக வலைதளப் பதிவில் ‘இயக்குனர் மணிரத்னம் அழைத்திருந்தார். அவருடைய படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதுவது குறித்து பேசியவர் பின்னர் மெதுவாக கதையை விவரிக்கத் துவங்கியபோது ‘ன்னாது மணிரத்னம் நமக்கு கதை சொல்றாரா’ என வாழ்வின் ஓர் மறக்க முடியாத தருணத்தில் நான் துய்த்துக் கொண்டிருப்பதாக எண்ணினேன். Moment that fuels me for whatever comes next.” என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மணிரத்னம் அடுத்து விஜய் சேதுபதி மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ள நிலையில் திரைக்கதை எழுத்துப் பணிகள் சென்று கொண்டிருக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேலை நாளில் வீழ்ச்சியடைந்த துல்கர் சல்மானின் ‘காந்தா’ !

ரஜினி படத்தை வேண்டாம் என்ற சுந்தர் சி… அடுத்த படம் யாருடன்?

பிரபாஸின் பவுசி திரைப்படம் இரண்டு பாகங்களாக ரிலீஸாகிறதா?

வெற்றிமாறன் தயாரிக்கும் ‘மாஸ்க்’ படத்தின் தலைப்புக்கு சிக்கல்… இயக்குனர் புகார்!

தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டனின் மகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments