போட்டோஷூட்டுக்குப் போடும் உழைப்பைப் படங்களுக்குப் போடுவதில்லையா?... ரசிகரின் கேள்விக்கு மாளவிகா பதில்!

vinoth
சனி, 21 ஜூன் 2025 (13:43 IST)
ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். கடைசியாக  அவர் நடித்த மாறன் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது.

இதையடுத்து இப்போது அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவானதங்கலான் படத்தில் நடித்தார். நடிப்பில் மாளவிகாவுக்குக் கிடைத்த ரசிகர்களை விட, அவரின் புகைப்படங்கள் மூலமாக கிடைத்த ரசிகர்கள்தான் அதிகம். இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களைக் குவித்து வருகின்றன.

கடந்த ஆண்டு தங்கலான் படத்தில் கவனம் ஈர்த்த மாளவிகா தற்போது சர்தார் 2 மற்றும் தி ராஜாசாப் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூகவலைதளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் உரையாடல் நிகழ்ச்சியை சமீபத்தில் அவர் நடத்தினார். அதில் ஒரு ரசிகர் “போட்டோஷூட்  மற்றும் மாடலிங் செய்ய போடும் உழைப்பை நீங்கள் படங்களுக்காகப் போடுவதில்லை என்று நான் நினைக்கிறேன். நான் சொல்வது சரியா?” எனக் கேட்டிருந்தார்.

அதற்கு மாளவிகா “கடந்த ஆண்டு ரிலீஸான தங்கலான் படத்தில் கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு உடலை வருத்தி நான் போட்ட உழைப்பை நீங்க பார்க்கவில்லை என்றால் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை” எனக் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

நான் சிறை செல்ல எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணம்: நடிகர் திலீப் பகிரங்க குற்றச்சாட்டு

கணவர் ப்ரஜினுக்காக பிக் பாஸ் வீட்டை விட்டு ஓடிய சான்ட்ரா: பரபரப்பு சம்பவம்!

23வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: திரையிட தேர்வான 12 புதிய தமிழ் திரைப்படங்கள்!

அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை.. கம்பேக் கொடுத்த கேபிஒய் பாலா.. இதுல சிம்புவுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments