விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ பட ரிலீஸ் தேதியில் சிக்கல்!

vinoth
சனி, 21 ஜூன் 2025 (11:36 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவரின் சமீபத்தைய படங்கள் பெரிதாகக் கவனம் ஈர்க்கவில்லை என்றாலும் அவருக்கென்று ஒரு நிலையான மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ளார்.

தெலுங்கில் நானியை வைத்து ஜெர்சி உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் கௌதம் தின்னனுரி. ஜெர்சி, மல்லி ராவாவை தொடர்ந்து தற்போது இவர் இயக்கியுள்ள படம் ‘கிங்டம்’. இதில் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்திற்காக கடுமையாக உழைத்துள்ள விஜய் தேவரகொண்டா சிக்ஸ் பேக் வைத்து நடித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே இரண்டுமுறை அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஜூலை 25 ஆம் தேதி ரிலீஸ் செய்யலாம் என திட்டமிட்டிருந்த நிலையில் நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாணியின் ‘ஹரிஹர வீரமல்லு’ திரைப்படம் அந்த தேதியில் ரிலீஸாவதால் இப்போது ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப் படக்குழு முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து ஃபுல் ட்ரீட்தான்.. ‘ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் எப்போ தெரியுமா? அதுமட்டுமா?

யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஆல்பம்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் கலெக்‌ஷன்ஸ்!

பைசன் இசையமைப்பாளரை ஹீரோவாக்கும் பா ரஞ்சித்!

சிம்பு & வெற்றிமாறனின் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம்… காரணம் ஐசரி கணேஷா?

அடுத்த கட்டுரையில்
Show comments