லோகா ஓடிடி ஸ்ட்ரீமிங் குறித்து அப்டேட் வெளியிட்ட முன்னணி ஓடிடி நிறுவனம்!

vinoth
புதன், 15 அக்டோபர் 2025 (08:04 IST)
கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் ரிலீஸான  ‘லோகா’ படத்தின் ஜூரம் தற்போதுதான்  திரையரங்குகளில் குறைந்துள்ளது.  துல்கர் சல்மான் தயாரிப்பில் டாம்னிக் அருண் இயக்கத்தில் உருவான  ‘லோகா’ திரைப்படம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ரிலீஸானது. கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த ஹாலிவுட்டில் வெளியாகும் vampire வகை சூப்பர் வுமன் வகைத் திரைப்படமாக உருவாகியுள்ளது.

முதலில் குறைவான திரைகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று அதன் பின்னர் திரைகள் அதிகரிக்கப்பட்டு கேரளா தாண்டி பேன் இந்தியா அளவில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. வெளியாகி ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இன்னும் கணிசமான திரையரங்குகளில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது ‘லோகா’. 300 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுவரை இந்த படம் எந்த ஓடிடியிலும் வெளியாகாமல் இருந்தது. இதையடுத்துத் தற்போது ஜியோ ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்த படத்தைக் கைப்பற்றியுள்ளது. விரைவில் இந்த படம் ஜியோவில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

23 ஆண்டுகளுக்குப் பிறகு களம் கண்ட அஜித்குமார்: மலேசிய ரேஸிங் அனுபவம் குறித்து நெகிழ்ச்சி

சரத்குமார்தான் சிறந்த நடிகர்! இவர எந்த லிஸ்ட்ல சேர்க்குறது? ராஜகுமாரனின் அடுத்த எபிசோடு

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments