லோகா படத்தின் ஜூரம் இன்னும் திரையரங்குகளில் இருந்து வெளியேறவில்லை. துல்கர் சல்மான் தயாரிப்பில் டாம்னிக் அருண் இயக்கத்தில் உருவான லோகா திரைப்படம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ரிலீஸானது. கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த ஹாலிவுட்டில் வெளியாகும் vampire வகை சூப்பர் வுமன் வகைத் திரைப்படமாக உருவாகியுள்ளது.
முதலில் குறைவான திரைகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று அதன் பின்னர் திரைகள் அதிகரிக்கப்பட்டு கேரளா தாண்டி பேன் இந்தியா அளவில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. வெளியாகி ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இன்னும் கணிசமான திரையரங்குகளில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது லோகா.
இந்நிலையில் லோகா ஓடிடி ரிலீஸ் குறித்து பலவித வதந்திகள் பரவி வந்த நிலையில் தற்போது அது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அக்டோபர் 23 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்த படம் ஸ்ட்ரீம் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது.