நடிகர் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகமாகி படிப்படியாக வெற்றிகள் கொடுத்து முன்னணி நடிகராக உருவாகியுள்ளார். சீதாராமம் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்களின் வெற்றி அவரை இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகராக்கியது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் இருந்து முறையின்றி வாங்கப்பட்ட அவரது சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது சம்மந்தமாக அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தும் நீதிமன்றம் கார்களைத் திரும்பக் கொடுக்க முடியாது என்று தீர்ப்பளித்தது. இந்நிலையில் தற்போது சென்னை கிரின் வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
அதே நேரத்தில் கொச்சியில் உள்ள நடிகர் மம்மூட்டி மற்றும் நடிகர் பிரித்விராஜ் ஆகியோர் வீடுகளிலும் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.